முகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி
சொல் ஜாலம்
By -ரொசிட்டா | Published On : 02nd October 2021 06:00 AM | Last Updated : 02nd October 2021 06:00 AM | அ+அ அ- |

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் இந்திய நகரங்களில் பிரதானமான ஒன்றின் பெயர் கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...
1. எண்ணெய்ச் செக்கிலிருந்து கிடைக்கும் இன்னொரு பொருள்.
2. மதுரை என்று முடியும் மற்றொரு ஊரின் பெயர்.
3. இதைச் சிறப்பாகச் செய்து முடிக்க, கைப்பழக்கம் அவசியம்.
4. இதுவும் ஒரு நல்லறம்தான்
5. திப்பு சுல்தானின் செல்லப் பெயர்.
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1.புண்ணாக்கு,
2. மானாமதுரை,
3. சித்திரம்,
4. இல்லறம்,
5. மைசூர்புலி.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : புதுதில்லி