முகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி
சொல் ஜாலம்
By -ரொசிட்டா | Published On : 09th October 2021 06:00 AM | Last Updated : 18th October 2021 10:05 PM | அ+அ அ- |

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் எல்லோருக்கும் பிடித்த இடம், நிறைய நல்ல காற்று கிடைக்கும் இடம் ஒன்றின் பெயர் கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...
1. இது கையில் இருந்தால் அறிவு வளரும்...
2. இணை பிரியாத ஐந்து பேர்....
3. இதைக் கடைந்த போது அமுதும் கிடைத்தது, நஞ்சும்...
4. இது காதில் இருந்தால் அழகு தரும்...
5. சுவையான கேசரிக்கு இது அவசியம் தேவை...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. புத்தகம்,
2. பாண்டவர்,
3. பாற்கடல்,
4. கடுக்கண்,
5. சர்க்கரை.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : கடற்கரை