நூல் புதிது

ஆசிரியருக்கு ஒரு சபாஷ் போட வேண்டும்! இந்தத் தொகுப்பில் பத்து கதைகள் உள்ளன.
நூல் புதிது

யானைக்கு உதவிய எறும்புகள்!

ஆசிரியர் - முனைவர் இடைமருதூர் கி . மஞ்சுளா
பக்கம் - 128
விலை - ரூ . 120/-
குப்பி, நிலைக்கண்ணாடியும் நிம்மியும், மகனிடம் கற்ற பாடம், கரப்பான் பூச்சியின் கேள்வியும் பல்லியின் பதிலும் முதலான 23 கதைகளின் தொகுப்பே இந்த நூல்! சிறுவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில், எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. அத்தனை கதைகளும் மிக அருமை! கதைகளின் இறுதில் ஆன்றோர்களின் பொன்மொழியும் இடம் பெற்றுள்ளது. தவறாமல் வாசிக்க வேண்டிய நூல் இது. 

வாலைத் தேடிய பல்லி

ஆசிரியர் - வ .விஜயலட்சுமி.
பக்கம் - 96
விலை - ரூ 100/ - 
ஆசிரியருக்கு ஒரு சபாஷ் போட வேண்டும்! இந்தத் தொகுப்பில் பத்து கதைகள் உள்ளன. குழந்தைகளின் உள்ளங்களை நன்கு புரிந்து அவர்களின் கற்பனைகளின் ஊடே பயணம் செய்து, கதைகளாக வெளிப்பட்டிருக்கிறது. அத்தனை கதைகளும் மிக அற்புதமாக இருக்கின்றன. குழந்தை இலக்கிய உலகில் ஒரு புதிய வெளிச்சம் பாய்ந்திருக்கிறது! பாராட்டுகள்! குறிப்பாக, "கரடி மேகம்' கதை மிக அருமை! குழந்தைகளுக்கு பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்லுவது போல் அமைந்து விட்டது! ஆசிரியருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
இரண்டு நூல்களையும் வெளியிட்டோர் - லாலிபாப் சிறுவர் உலகம், 28/11, கன்னிக்கோயில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை - 600018. கைபேசி - 9841236965.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com