விடுகதைகள்

சின்னக் குகைக்குள்ளே சிவப்புத் துணி - அது எந்நேரமும் ஈரம்; எளிதில் உலராது...

1. சின்னக் குகைக்குள்ளே சிவப்புத் துணி - அது எந்நேரமும் ஈரம்; எளிதில் உலராது...
2. ஓட்டு வீட்டை, உடன் தூக்கிச் செல்கிறார்! யார் இவர்?
3. கணக்கில்லாத பிள்ளைகளைக் கழுத்தைச் சுற்றிச் சுமக்கும் தாய்...
4. எலும்பு உண்டு, தோல் இல்லை; கண்கள் உண்டு, 
தலை இல்லை; தண்ணீரிலே நீந்தும்; தரையிலே நடக்கும்...
5. ஒற்றைக் காலிலே ஆடுவான், உம்மெனப் பாடுவான்...
6. முந்நூறு கால் உடையாள், முணுமுணுப்புத்தான் அறியாள், வேண்டாத பேரையெல்லாம் விரட்டி ஓட்டும் வேலைக்காரி...
7. என்னைப் போலவே இருப்பான், ஆனால் ஏனோ பேச மாட்டான்...
8. தோல் வீட்டுக்குள்ளே துணி வீடு; துணி வீட்டுக்குள்ளே 
ஐந்து பேரு...


விடைகள்

1. நாக்கு    
2. ஆமை    
3. தென்னை மரம்
4. நண்டு    
5.  பம்பரம்    
6.  துடைப்பம்
7.  முகம் பார்க்கும் கண்ணாடியில் நமது பிம்பம்  
8.  பூட்ஸ், சாக்ஸ், விரல்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com