ரட்சித்தான்!

நீலக்குருவி வாலாட்டி - நிதம் நீட்டி முழக்கும் குரலைக் கேள்!
ரட்சித்தான்!

நீலக்குருவி வாலாட்டி - நிதம் 
நீட்டி முழக்கும் 
குரலைக் கேள்!

தாளக் கதியை சீராக்கி - அது 
தாழப்பறக்கும் 
அழகைப் பார்!

வாழைக் குருத்து சுருண்டது போல் - நல் 
வாகாய் அமைந்த 
உடலைப் பார்!

கோலப்புள்ளி வச்சது போல் - இரு 
கொஞ்சும் சிறிய 
கண்கள் பார்!

சோளக்கதிரில் உட்கார்ந்து - அது 
இரையைக் கொத்தும் 
நிறைவைப் பார்!

கவணில் கல்லை வைத்ததனை 
அடிக்கச் சிறுவன் 
முயற்சித்தான்!
 
அதன் அழகை, குரலைக் கேட்டுக் 
கை விட்டான் முயற்சியை 
ரட்சித்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com