விடுகதைகள்

ஒருவனுக்கு இரண்டு கண்கள், பகலில் பார்க்க ஒன்று, இரவில் பார்க்க ஒன்று...


1. ஒருவனுக்கு இரண்டு கண்கள், பகலில் பார்க்க ஒன்று, இரவில் பார்க்க ஒன்று...
2. சின்னப் பையனைக் கண்டவுடன் திருடன் ஓடிப்போனான்...
3. அண்ணன் தம்பி  நான்கு பேர். ஒருவன் ஓடுவான், களைப்படைய மாட்டான். இன்னொருவன் தின்பான், திருப்தியடைய மாட்டான். அடுத்தவன் நிறையக் குடிப்பான், தாகம் தீராது. மற்றொருவன் பாடுவான்...
4. என்னைத் தரையில் புதைத்தார்கள்... என்னைப் போல பல பேர் கிடைத்தார்கள்...
5. அதிக நீளமும் இல்லை, அதிக அகலமும் இல்லை. 
உடையவர் அளந்தால் ஒரு சாண் நீளம்...
6.  ஒரே வீட்டுக்கு ஒரே ஆள்... உருவில் மிகவும் சிறிய ஆள்..
7. சாப்பாட்டுக்கு இது அவசியம்தான்... ஆனாலும் தனியாகத் தின்ன முடியாது...
8. வேலைக்காரிகள் வெள்ளை நிறம் வீட்டு வாசல் 
காக்கிறார்கள்.  வீட்டுக்காரி சிவப்பு நிறம் துடுக்காகப் பேசுகிறாள்...

விடைகள்

1.  சூரியன், சந்திரன்    
2. கைவிளக்கு, இருள்
3. நீர், நெருப்பு, பூமி, காற்று  
4. விதை
5.  செருப்பு  
6. நத்தை
7.  உப்பு    
8.  பற்கள், நாக்கு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com