வினா-விடைப் பொங்கல்!

பொங்கல் பொங்கல் - என்ன பொங்கல்?பால் பொங்கல் - என்ன பால்?
வினா-விடைப் பொங்கல்!


பொங்கல் பொங்கல் - என்ன பொங்கல்?
பால் பொங்கல் - என்ன பால்?
தேங்காய் பால் - என்ன தேங்காய்?
கடைத் தேங்காய் - என்ன கடை?
பொம்மைக் கடை -என்ன பொம்மை?
மெழுகு பொம்மை - என்ன மெழுகு?
தேன் மெழுகு - என்ன தேன்?
கொம்புத்  தேன் - என்ன கொம்பு?
மான் கொம்பு - என்ன மான்?
கலை மான் - என்ன கலை?
நடனக் கலை - என்ன நடனம்?
மயில் நடனம் - என்ன மயில்?
பெண் மயில் - என்ன பெண்?
தமிழ்ப் பெண் - என்ன தமிழ்?
இசைத் தமிழ் - என்ன இசை?
குயில் இசை - என்ன குயில்?
சோலைக் குயில் - என்ன சோலை?
பூஞ் சோலை - என்ன பூ?
மாலைப் பூ - என்ன மாலை?
முத்து மாலை - என்ன முத்து?
ஆணிமுத்து - என்ன ஆணி?
கல்யாணி - என்ன கல்?
பொங்கல்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com