அங்கிள் ஆன்டெனா

உலகின் 5 கண்டங்களிலும் சேர்த்து ஏறக்குறைய 15 வகை கொக்குகள் உள்ளன. அவற்றின் வயது, அளவு வசிப்பிடம் ஆகியவற்றைப் பொறுத்து இனங்களில் வேறுபாடுகள் உள்ளன.
அங்கிள் ஆன்டெனா


உலகில் எத்தனை வகையான கொக்குகள் உள்ளன?

உலகின் 5 கண்டங்களிலும் சேர்த்து ஏறக்குறைய 15 வகை கொக்குகள் உள்ளன. அவற்றின் வயது, அளவு வசிப்பிடம் ஆகியவற்றைப் பொறுத்து இனங்களில் வேறுபாடுகள் உள்ளன.  டிமாய்சல் என்ற இன வகைக் கொக்குகளின் மொத்த உயரமே  90 செ.மீ.தான். இவைதான் உலகின் மிகச் சிறிய கொக்குகள். ஸாரஸ் என்ற இனக் கொக்குகள்தான் உலகிலேயே அளவில் மிகவும் பெரியவை. இவை 175 செ.மீ. உயரம் இருக்கும்.

எல்லா வகைக் கொக்குகளுமே ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில்தான் வசிக்கும். வெள்ளை நிறம் தவிர இளநீல வண்ணத்திலும் கொக்குகள் இருக்கும். சிலவற்றுக்குக் கழுத்துப் பகுதியில் மட்டும் கருப்பு நிறம் காணப்படும். எப்படிப் பார்த்தாலும் சைபீரியாவில் வசிக்கும் கொக்குகள்தான் உலகிலேயே மிகவும் அழகானவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com