தெரியுமா...?

1935-ஆம் ஆண்டு "பாரத ரிசர்வ் வங்கி' தோற்றுவிக்கப்பட்டது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் உருவத்துடன் முதலில் ரூ.5 நோட்டு 1938-இல் வெளியானது.  
தெரியுமா...?

1935-ஆம் ஆண்டு "பாரத ரிசர்வ் வங்கி' தோற்றுவிக்கப்பட்டது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் உருவத்துடன் முதலில் ரூ.5 நோட்டு 1938-இல் வெளியானது.  அடுத்து பிப்ரவரியில் ரூ.10-ம், மார்ச் மாதத்தில் ரூ.100-ம், 1938-ஆம் ஆண்டு ஜூனில் ரூ.1000, ரூ.10 ஆயிரம் நோட்டுகளும் வெளிவந்தன.

1947-ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்ததும்,  ரூபாய் நோட்டிலிருந்த ஆறாவது ஜார்ஜ் மன்னர் படம் நீக்கப்பட்டு அசோக சக்கரம் இடம் பெற்றது. 1996-ஆம் ஆண்டில் இருந்து மகாத்மா காந்தியின் படம் ரூபாய் நோட்டுகளில் அச்சிட்டு வெளிவரத் தொடங்கியது.

எலிசபெத் மகாராணி மறைவையடுத்து, மூன்றாவது சார்லஸ் பிரிட்டன் மன்னரானார்.  அரசியல் விஷயங்களில் அவர் தலையிடுவதில்லை. எனினும், சில சிறப்பு அதிகாரங்கள் உள்ளன. அரசை நியமித்தல், நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவுகள் குறித்து உரையாற்றுதல், மசோதாக்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட பொறுப்புகள் மன்னரைச் சார்ந்தது. "யுனைடெட் கிங்டம்'-ஐ தவிர,  ஆன்டிகுவா அன்ட் பார்படா,  ஆஸ்திரேலியா,  பஹாமாஸ், பெலிஸ், கனடா, கிரனெடா, ஜமைக்கா, நியூஸிலாந்து, பாப்வா நியூகினியா, செயின்ட் கிட்ஸ் அன்ட் நெவிஸ்,  செயின்ட் லூஸியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரளடைன்ஸ் (கரீபியன் கடலில் ஒரு தீவு), சாலமன் தீவுகள், தாவலூ உள்ளிட்ட 14 நாடுகள் மன்னரின் ஆளுகைக்கு உள்பட்டவை. 2021-ஆம் ஆண்டு நவம்பரில் மன்னரின் ஆளுகைக்கு உள்பட்ட பார்படோஸ் தனி குடியரசானது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தில் குற்றங்கள் நடப்பது அரிதாகிவிட்டது. இதனால் கைதிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. இங்குள்ள பல சிறைகள் கைதிகளே இல்லாததால், வெறிச்சோடி காணப்படுகின்றன.  சில சிறைகள் வணிக வளாகங்களாகவும், பொழுதுபோக்கு மையங்களாகவும் மாறிவிட்டன. அருகேயுள்ள மற்ற ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள கைதிகளை அடைப்பதற்காக, நெதர்லாந்து சிறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com