தெரியுமா?

தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் காலணிகள், கையுறைகள், தலைக்கவசம் ஆகியன ஆஸ்பெட்டால் இழைகளால் ஆனவை.  இவை நெருப்பில் எரியாது.
தெரியுமா?


தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் காலணிகள், கையுறைகள், தலைக்கவசம் ஆகியன ஆஸ்பெட்டால் இழைகளால் ஆனவை.  இவை நெருப்பில் எரியாது. மின்சாரத்தைக் கடத்தாது. 2 ஆயிரம் முதல் மூன்று ஆயிரம் சென்டிகிரேடு வரை வெப்பத்தைத் தாங்கக் கூடியவை.

உலகிலேயே சிறிய கரன்சி நோட்டு ஹாங்காங் அரசு வெளியிட்ட 1 சென்ட் மதிப்புள்ள நோட்டுதான். அது ஒரு பக்கத்தில் அச்சாகிய நோட்டு அடுத்த பக்கம் வெற்றிடமாக இருந்தது.

ஒரு ஆண்டு ஆணாகவும், அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயிரினம்தான் ஈரிதழ் சிட்டு.

பண நோட்டுகளில் வரிசை எண் அச்சாகியிருக்கும்.  வரிசை எண்களே இல்லாத கரன்சி நோட்டுகளையும் வெளியிட்டிருக்கின்றனர். 

பதக்கம் விருது வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் எகிப்து மன்னர்கள்தான். 

சிகாகோவில் உள்ள மத்திய மருத்துவ நிலையம்தான் உலகிலேயே மிகப் பெரிய மருத்துவ நிலையம். இங்கு 5,600 படுக்கைகள் உள்ளன.

மகாலெஷ்மி சுப்பிரமணியன்,
காரைக்கால்.

35 முறை ஆஸ்கர் விருதுகளைப் பெற்றவர் வால்ட் டிஸ்னி.

லூயி என்ற பெயரில் பதினெட்டு மன்னர்கள் பிரான்சு நாட்டை ஆண்டுள்ளனர்.

சர்க்கரை நோய் உள்ள நோயாளிக்கு எந்த உறுப்பும் சரியாக இயங்காது.

பிரெஞ்சு மொழி 24 நாடுகளில் அரசு மொழியாக உள்ளது.

வட துருவத்தில் நிலம் இல்லை. தென் துருவத்தில் நீர் இல்லை.

சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாகத் தோன்றும். ஆனால் அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிகாவில் மட்டும்தான்.

ஒரு குதிரைத் திறன் என்பது 550 பவுண்டு எடையுள்ள ஒரு பொருளை ஒரு விநாடியில் ஒரு அடி உயரத்தில் தூக்குவதாகும்.

கே.பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com