தெரியுமா?

ஏவுகணைகள் துல்லியமாக விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் தாக்கி அழிக்கின்றன.
தெரியுமா?

ஏவுகணைகள் துல்லியமாக விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் தாக்கி அழிக்கின்றன. ஏவுகணைகள் ரேடார், விமானத்தின் என்ஜினில் இருந்து வரும் வெப்பக் கதிர்களைக் கணித்து பின்தொடர்ந்து தாக்குகின்றன. ஏவுகணைகள் பாய்வதைக் கணினியில் பார்த்து இணையத்தில் கட்டளைகளைத் தொடுத்து பாதையையும்கூட மாற்றலாம்.

சீன வரலாற்றில் இரு பெரும் சக்கரவர்த்திகளாக மதிக்கப்படுவர்கள் யான்டி, ஹீவாங் டி.  இந்த இருவரின் முகத்தை மட்டுமே மிகப் பிரமாண்டமாகச் செதுக்கி சிலை அமைத்துள்ளனர். இந்தச் சிலையின் உயரம் 106 அடி. இருந்தாலும் அகலம், அளவுகளின் அடிப்படையில் மிகப் பிரமாண்டமானது. இந்தச் சிலையின் கண் மட்டும் 3 மீட்டர் நீளமாகும். சீனாவின் செங்கசோவ் நகரில் அமைந்துள்ள இந்தச் சிலை 2007}ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதாகும்.

ஐரோப்பிய, ஆப்பிரிக்க கண்டங்களை கடல் மார்க்கமாகப் பிரிக்கும் தொலைவு 14.3 கிலோ மீட்டர் மட்டும்தான். இந்த இரு கண்டங்களுக்கு இடையே ஜிப்ரால்டர் ஜலசந்தி அமைந்திருக்கிறது. கண்டங்களுக்கு இடையே மட்டுமின்றி, பல நாடுகளுக்கும் முக்கிய நீர்வழிப் பாதையாக அமைந்திருக்கிறது.

தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல். வடக்கிலிருந்து வீசும் காற்று "வாடை'. கிழக்கிலிருந்து வீசும் காற்று "கொண்டல்'. மேற்கிலிருந்து வீசும் காற்று "மேலை'. காற்றின் வேகத்தைப் பொருத்து, அதன் பெயர்களை அறிவோம். 6 கி.மீ. வேகத்தில் வீசும் காற்று} மென் காற்று, 6 முதல் 11 கி.மீ. வேகத்தில் வீசும் காற்று} இளந்தென்றல், 12 முதல் 19 கி.மீ. வேகத்தில் வீசும் காற்று} தென்றல்,  20 முதல் 29 கி.மீ. வேகத்தில் வீசும் காற்று} புழுதிக்காற்று, 30 முதல் 39 கி.மீ. வேகத்தில் வீசும் காற்று} ஆடிக்காற்று, 100 கி.மீ. வேகத்தில் வீசும் காற்று} கருங்காற்று, 101 முதல் 120 கி.மீ. வேகத்தில் வீசும் காற்று} புயல் காற்று, 120 கி.மீ. வேகமாக வீசும் காற்று} சூறாவளிக் காற்று.

உலகின் மிகப் பெரிய ரவுண்டானா மலேசியாவில் அமைந்துள்ளது. அந்த நாட்டின் நிர்வாகத் தலைநகரமான புத்ரா ஜெயாவில் இது அமைந்துள்ளது.

கோவேறு கழுதை ராணுவப் பணிக்கு ஏற்றது. இந்தக் கழுதைகள் உற்பத்தியில் சீனா முதலிடமும், மெக்சிகோ இரண்டாமிடத்திலும் இருக்கின்றன. மத்திய கிழக்கு நாடான ஜோர்டன், ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மொராக்கோ, டுனிஷியா, எத்தியோப்பியாவில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவேறு கழுதைகள் இருக்கின்றன.

சில எறும்பு வகைகள் தாக்குதலுக்கு உள்ளாகும்போது, தன்னைத்தானே வெடிக்கச் செய்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com