சரண் இயக்கத்தில் அஜீத்-சமீரா ரெட்டி நடிக்கும் "அசல்' படத்தில் கடும் பரிசீலனைக்குப் பிறகு, பாவனா இன்னொரு நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். குடும்பப்பாங்கான இந்த வேடத்துக்காக இறுதி வரை சினேகாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால், பாவனாவுக்கு ஆதரவாக "தல'யசைத்ததால் அவர் நாயகியாகி விட்டார். மாஃபியா கும்பல் பற்றிய இந்தப் படத்தின் திருப்புமுனையான ஒரு சில காட்சிகளில் மட்டும் அஜீத்துடன் நடிக்க "பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கானிடம் பேசியிருக்கிறார்களாம். சிவாஜி புரொடக்ஷன்ஸýக்காகவும் அஜீத்துக்காகவும் ஷாருக் சம்மதிப்பார் என நம்புகிறது பட யூனிட். ஏற்கெனவே, சந்தோஷ்சிவன் இயக்கிய "அசோகா' ஹிந்திப் படத்தில் ஷாருக்கானுடன் சில காட்சிகளில் அஜீத் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.