கடல்.. சமுத்திரம்... ஈரம்!

"கடல் பூக்கள்', "சமுத்திரம்' படங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும் "ஈரம்' படத்துக்குப் பிறகுதான் தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறார் சிந்துமேனன். ""அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வரவில்லைய
கடல்.. சமுத்திரம்... ஈரம்!
Updated on
1 min read

"கடல் பூக்கள்', "சமுத்திரம்' படங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும் "ஈரம்' படத்துக்குப் பிறகுதான் தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறார் சிந்துமேனன். ""அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வரவில்லையே'' என்று கேட்டால்...  ""ஈரம்' படத்துக்குப் பிறகு பல நல்ல வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

அதில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தீர்மானித்திருந்தேன். அந்த சமயம் என்னுடைய நல விரும்பிகள் ஒரு படத்தில் நல்ல கேரக்டரில் நடித்தால் மட்டும் போதாது; அந்தப் படம் வெற்றியடைந்தால்தான் ஃபீல்டில் நிலைக்க முடியும் என ஆலோசனை கூறினார்கள்.

அதில் நியாயம் இருப்பதை உணர்ந்துகொண்டேன். எனவே இனி என் கேரக்டரை மட்டும் பார்க்காமல் ஒரு வெற்றிப் படத்துக்குரிய நல்ல கதையும் அமைய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். அதற்காகக் காத்திருக்கவும் தயார்'' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com