"ஸ்டார் நடிகர்கள் வேண்டாம்'

"மகிழ்ச்சி' படத்தின் மூலம் கதாநாயகன் ஆகியிருக்கிறார் இயக்குநர் வ.கெüதமன். ""என்னுடைய கதை மிகச் சிறந்த கதை; ஆனால் இதில் நடிக்க எந்த நடிகரும் சம்மதிக்கவில்லை; அதனால் நானே ஹீரோவாகிவிட்டேன்' என்பதுதான் நீ
Updated on
1 min read

"மகிழ்ச்சி' படத்தின் மூலம் கதாநாயகன் ஆகியிருக்கிறார் இயக்குநர் வ.கெüதமன். ""என்னுடைய கதை மிகச் சிறந்த கதை;

ஆனால் இதில் நடிக்க எந்த நடிகரும் சம்மதிக்கவில்லை; அதனால் நானே ஹீரோவாகிவிட்டேன்' என்பதுதான் நீங்கள் ஹீரோவாகக் காரணமா?'' என்று கேட்டபோது...

""நிச்சயமாக அப்படி இல்லை. இந்தக் கதையில் நடிக்கச் சொல்லி நான் யாரிடமும் கேட்கவில்லை. "மகிழ்ச்சி' திரைப்படம் நீல.பத்மனாபனின் "தலைமுறைகள்' என்ற நாவலைத் தழுவியது. இந்த நாவலைப் படித்தபோதே அதில் உள்ள திரவி என்ற பாத்திரமாகவே வாழத் தொடங்கிவிட்டேன். இந்த நாவலைப் படமாக்கினால் திரவி பாத்திரத்தில் நான்தான் நடிக்க வேண்டும் என ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானித்துவிட்டேன். தவிர, வாழ்க்கையின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் இதுபோன்ற கதையில் கதாநாயகனாக நடிக்க இமேஜ் உள்ள எந்த ஸ்டார் நடிகரும் தேவையில்லை. இதற்கு புதுமுகம்தான் சரிப்பட்டு வரும்.

அதேபோல படத்தின் வேறு சில கதாபாத்திரங்களுக்கு பிரகாஷ்ராஜ், சீமான் போன்றோர்தான் பொருத்தமாக இருப்பர். அதனால் அவர்களை நடிக்க வைத்துள்ளேன். இப்போதே தைரியமாகச் சொல்கிறேன். இந்தப் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் படம் முடிந்த பிறகு, ஒரு ஐந்து நிமிடமாவது இருக்கையில் அமர்ந்து, ஆழ்ந்து சிந்தித்து, ஒரு முடிவோடுதான் வீட்டுக்குச் செல்வார்கள்'' என்றார் வ.கெüதமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com