"தடகள" ராணி!

""அப்பா சகாயராஜ் டான்டெக்ஸ்ல பணிபுரிந்து ரிட்டையர்ட் ஆயிட்டாங்க! அம்மா இல்லத்தரசி.   நாலாவது படிக்கும் போதே பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்தான் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் என்று பல
"தடகள" ராணி!
Published on
Updated on
1 min read

""அப்பா சகாயராஜ் டான்டெக்ஸ்ல பணிபுரிந்து ரிட்டையர்ட் ஆயிட்டாங்க! அம்மா இல்லத்தரசி.   நாலாவது படிக்கும் போதே பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்தான் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் என்று பல விளையாட்டுகளில் பயிற்சி கொடுத்தார். எல்லா விளையாட்டையும் கத்துக்கிட்டாலும் நீளம் தாண்டுதல்தான் எனக்கு ரொம்பப் பிடித்தது. அதற்காக மாஸ்டர் ஸ்பெஷல் ட்ரெயினிங் கொடுத்தார்.

ஆறாவது படிக்கும்போது úஸôனல் மீட்ல முதல் பரிசா வெள்ளிப் பதக்கம் வென்றேன். அந்த வெற்றி தந்த உற்சாகத்தில் எட்டாவது படிக்கும்போது விருதுநகர்ல நடந்த மாநில அளவிலான போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றேன்.

ஒன்பதாவது படிக்கும்போது தேசிய அளவில் நடந்த போட்டியில் பங்கேற்று இரண்டாம் பரிசாக      வெண்கலப் பதக்கம் வென்றேன் மாவட்ட, மாநில அளவில் போட்டிகளில் வென்றதுடன் தில்லி-லக்னெü, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா என்று மாநிலங்கள் தோறும் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கெடுத்து பதக்கங்கள் வென்றுள்ளேன். சமீபத்தில்

லக்னெüவில் நடந்த    ஜுனியர் ஃபெடரேஷன் போட்டியில் நீளம் தாண்டுதலில் 5.75 மீட்டர் வரை தாண்டி இரண்டாமிடமும், ரிலேவில் முதலிடத்திலும் வெற்றி பெற்றுள்ளேன். இதுவரை பங்கேற்ற போட்டிகளில் பதினைந்து தங்கப் பதக்கங்களையும் முப்பது வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளேன். இனியும் வெல்வேன்!

இந்த ஆண்டு இறுதியில் பெல்ஜியம் நாட்டில் நடைபெற உள்ள ஜுனியர் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கு பெறவும் தேர்வு பெற்றுள்ளேன்.

என்னுடைய முன்னுதாரணமாக நான் கருதுவது அஞ்சு (அதிகபட்ச நீளம் தாண்டிய சாதனை 6.83) பாபி ஜார்ஜ்தான்! லட்சியம்- ஒலிம்பிக் செல்ல வேண்டும். வெல்ல வேண்டும். வருமான வரித்துறையில் உயர் அதிகாரியாய் வரவேண்டும். உலகளவில் விரல் விட்டு எண்ணக்கூடிய விளையாட்டு வீராங்கனைகளின் வரிசையிலும் இடம் பெறவேண்டும் என்பதுதான்!

நீளம் தாண்டுதலில் கடுமையான பயிற்சியளித்து தொடர்ந்து ஊக்குவித்து வரும் மாஸ்டர் சுரேஷ், தலைமை பயிற்சியாளரான நாகராஜன் ஆகியோர் முக்கியமானவர்கள். கல்விச் செலவுகளை ஏற்றுக் கொண்டதுடன் பல்வேறு விதத்திலும் துணை நிற்கும் எங்கள் பாரத் கல்லூரியின் செயலாளர் புனிதா கணேசன், உற்சாகமூட்டும் எனது பெற்றோர் சகோதர, சகோதரிகள் மாணவ, மாணவிகள் ஆசிரிய, ஆசிரியைகளுக்கெல்லாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்'' என்கிறார் தடகள ராணியாய் மகுடம் சூட்டிக்கொண்டிருக்கும் டெல்பின் ராணி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com