இரண்டு பெயரையும் வாங்கிடணும்!

அப்பா சுந்தர்ராஜ் தஞ்சைத் தமிழர். "உதிரிப்பூக்கள்', "தப்புத்தாளங்கள்' போன்ற படங்களில் நடித்தவர். அம்மா பரிமளா ஜோஷாய் கன்னடர். "வைதேகி காத்திருந்தாள்', "எங்களுக்கும் காலம் வரும்' படங்களில் முக்கிய பாத்
இரண்டு பெயரையும் வாங்கிடணும்!
Updated on
2 min read

ப்பா சுந்தர்ராஜ் தஞ்சைத் தமிழர். "உதிரிப்பூக்கள்', "தப்புத்தாளங்கள்' போன்ற படங்களில் நடித்தவர். அம்மா பரிமளா ஜோஷாய் கன்னடர். "வைதேகி காத்திருந்தாள்', "எங்களுக்கும் காலம் வரும்' படங்களில் முக்கிய பாத்திரம் ஏற்றவர்.

நான் பெங்களூரில் உள்ள கிறிஸ்ட் காலேஜில் படிப்பை முடிச்சேன். சிறு வயதில் இருந்தே மேடை நாடகங்களில் நடிச்சிருக்கேன். "பொய்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்குப் பாலசந்தர் சார் எங்களை அழைத்திருந்தார். ""மேக்னா சினிமாவில் நடிக்கணும்னு ஆசைப் படுறா''ன்னு கே.பி.சார்கிட்ட எங்க அப்பா சொன்னார். அவர் தயாரிக்கும் "கிருஷ்ண லீலை' படத்திலே வாய்ப்பு தந்தார். முதல் படமே பாலசந்தர் படமாக அமைந்தது என் பாக்கியம்'' பிரியமாக பேசுகிறார் தமிழுக்குப் புதுவரவான நடிகை மேக்னா.

நயன்தாரா மாதிரி இருக்கீங்கன்னு சொல்றாங்களே?

அட ஆமாங்க. எங்கே போனாலும் நீங்க நயன்தாரா மாதிரி இருங்கீங்கன்னு விசாரிக்கிறாங்க. ஒரு திறமையான நடிகையின் சாயலில் இருப்பது நல்ல விஷயம்தானே? "காதல் சொல்ல வந்தேன்' படத்தோட சி.டி. ரிலீஸ் விழாவில் சினிமாக்காரர்கள் எல்லோரும் சின்ன நயன்தாரான்னு சொல்லி புகழ்ந்து விட்டார்கள். அப்படியே றெக்கை கட்டி பறக்குற மாதிரி இருந்துச்சு.

படம் வெளிவந்தவுடன் நிறைய பேர் போன் பண்ணி நயன்தாரா மாதிரியே இருக்கீங்கன்னு சொல்றாங்க. பியூட்டி பார்லர் பக்கம் போனா ஆட்டோகிராப் போடுவதற்கே நேரம் போயிடுது. நயன்தாராவை சந்தித்தால் அவங்க எப்படி ரீ-ஆக்ட் பண்றாங்கன்னு பார்க்க ஆர்வம் இருக்கு. இப்போ அவங்க இருக்கிற இடத்துக்கு பக்கத்துல வந்தா அதுவே சாதனை. சந்தோஷம்தான். ஆனால் நடிப்பில் எனக்குன்னு தனி ஸ்டைல் வேணும்.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அதற்குள் பிஸியாகிட்டீங்களே?

தெலுங்கில் "பெண்டு அப்பாராவ்' என்ற படத்தில் அல்லரி நரேஷ் உடன் நடிக்கும் வாய்ப்பு. காமெடி என்டர்டெயினர். படம் சூப்பர் டூப்பர் ஹிட். "பொல்லாதவன்' பட கன்னட ரீமேக்கில் நான்தான் ஹீரோயின். நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்தாகி விட்டது. இதோ இப்போது மலையாளத்தில் வினயன் சார் இயக்கத்தில் "யக்ஷீயும் நானும்' என்ற படத்தில் நடிக்கிறேன். இந்த மாதிரி நேரத்தில் வினயன் சார் கிடைத்ததில் மகிழ்ச்சி. படம் நல்ல பெயர் வாங்கிடனும்னு ஆர்வமாக இருக்கேன்.

கிளாமரா நடிப்பீங்களா?

நிச்சயம் நடிப்பேன். ஆனா, லிமிட் தாண்ட மாட்டேன். மேக்னான்னு சொன்னா என் நடிப்புதான் ஞாபகத்துக்கு வரணும். என் உடம்பு ஞாபகத்துக்கு வரக் கூடாது. அதற்கு தகுந்தாற் போல் என் கிளாமர் இருக்கும். பக்கத்து வீட்டுப் பெண் மாதிரியான மேனரிஸத்தையும் என்னிடம் எதிர்பார்க்கலாம். முன்னணி நடிகை, கௌரவமான நடிகைனு ரெண்டு பெயரையும் ஒரே நேரத்தில் வாங்கிடணும்னு ஆசை இருக்கு.

சினிமா தவிர என்ன பிடிக்கும்?

பயணம், படிப்பு இரண்டிலும் ஆர்வம் இருக்கு. நாவல், சிறுகதைனு நிறைய படிக்கிறேன். அதுபோக டான்ஸ். பரதநாட்டியத்தில் நிறைய ஆர்வம் இருக்கு. நடனத்தை மையப்படுத்தி படம் வந்தால் யோசிக்காமல் கால்ஷீட் கொடுத்துடுவேன். ஒரு வருஷம் ஆனாலும் ஆசையாக நடிச்சுக் கொடுப்பேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com