
சமீபத்தில் விஜய் டிவியில் துவங்கி நல்ல
வரவேற்பைப் பெற்றிருக்கும் தொடர்
"என் பெயர் மீனாட்சி'. இத்தொடரின் மூலம்
சின்னதிரை நாயகியாக அறிமுகமாகியிருக்கும்
ஹர்ஷாவுடன் ஒரு சந்திப்பு.
"என் பெயர் மீனாட்சி' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றிசொல்லுங்கள்?
"என் பெயர் மீனாட்சி' தொடர்தான் நான் நடிக்கும் முதல் தமிழ்த் தொடர். இதில் "மீனாட்சி' என்று எனக்கு ரொம்பவும் மென்மையான கேரக்டர். நான் கேரளத்தைச் சேர்ந்தவள். இந்தத் தொடரில் நடிப்பது நல்ல அனுபவமாக இருக்கிறது. இப்படி ஒரு தொடரில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நினைத்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
தமிழில் எப்படி வாய்ப்பு கிடைத்தது? இதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே மலையாளத் தொடர்களில் நடித்து வருகிறேன். அதில் என்னைப் பார்த்துவிட்டுத்தான் டைரக்டர் ஜெரால்டு தமிழில் நடிக்கக் கூப்பிட்டார். கதை பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படித்தான் தமிழ் சின்னதிரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறேன். இப்பொழுது இந்தத் தொடருக்காக கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்து நடித்துவிட்டுச் செல்கிறேன்.
மொழிப் பிரச்னையை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
படப்பிடிப்பு ஆரம்பித்தபோது ரொம்ப சிரமமாக இருந்தது. இப்போது ஓரளவுக்குச் சமாளித்துக் கொள்கிறேன். செட்டில் இருக்கும் எல்லாரும் எனக்குத் தமிழ் கற்றுத்
தருகிறார்கள். ரொம்ப உதவியாக இருக்கிறார்கள். நான் என்ன செய்யவேண்டும் என்பதை டைரக்டர் முதலிலேயே எனக்குச் சொல்லிக் கொடுத்துவிடுவார். அதை அப்படியே ஞாபகம் வைத்துக் கொண்டு நடிப்பேன். அடுத்த தொடரில் நடிக்கும்பொழுது என் சொந்த குரலில் நானே தமிழில் பேசி நடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
மலையாளத்தில் படங்களில் நடித்திருக்கிறீர்களா?
இல்லை. மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழில் இருந்தும் பெரிய திரையில் நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எனக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை.
வேறு தொடர்களில் எதுவும் நடிக்கிறீர்களா?
இதுதான் முதல்தொடர். இதைப் பார்த்துவிட்டுத்தான் வாய்ப்புகள் வரவேண்டும். எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறேன்.
குடும்பம்?
என் அப்பா ஹரிகிருஷ்ணன் நாயர், அம்மா ஹேமா, மாலினி, வினிதா என இரண்டு அக்கா இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நான்தான் வீட்டில் கடைக் குட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.