அரிய தாவரங்களின் பொக்கிஷம்!

மரபணுக்கள் என்பது மனித குலத்திற்கு மட்டுமின்றி, விலங்குகள் மற்றும் தாவரங்களின் வாழ்விலும் முக்கியமானதாகும். இத்தகைய மரபணுக்களை வைத்து பல்வேறு புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் சூழலில், மேற்கு த
அரிய தாவரங்களின் பொக்கிஷம்!
Updated on
2 min read

ரபணுக்கள் என்பது மனித குலத்திற்கு மட்டுமின்றி, விலங்குகள் மற்றும் தாவரங்களின் வாழ்விலும் முக்கியமானதாகும். இத்தகைய மரபணுக்களை வைத்து பல்வேறு புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் சூழலில், மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் அரிய வகை தாவரங்களைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறது நீலகிரியில் உள்ள கூடலூர்  வெப்பமண்டல தாவர மரபணு சேமிப்பு பூங்கா (ஜீன்பூல்).

மேற்கு தொடர்ச்சி மலையில் பூக்கும் மற்றும் பூவாத் தாவர சிற்றினங்கள் 6,000 வகைகள் காணப்படுகின்றன. இதில் புணர்ச்சியில்லா முட்செடிகளில் 1,045 தாவரங்கள் இந்நிலத்திற்கே உரிய தாவர

வகையாகும்.

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவிலான நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் காடுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. தோட்டக்கலை மற்றும் விவசாயப் பயிர்களாலும், புதிய குடியேற்றங்களாலும், நீர்மின் திட்டங்களாலும், தொழிற்சாலைகளாலும் இந்த வளமான காடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் இந்நிலத்திற்கே உரிய விலை மதிக்க முடியாத தாவர வகைகள் தற்போது அழிவின் பிடியில் உள்ளன.

உலகின் பல பகுதிகளிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாக்கும்

(ஐமஇச) நிறுவனம் இயற்கை வளங்கள் மற்றும் மரபணுக்களை எப்பாடுபட்டாகிலும் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாகத்தான் இந்தியாவில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் தேவாலா பகுதியில் தமிழக வனத்துறையின் சார்பில் மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியுதவியுடன் கடந்த 1989-ம் ஆண்டில் சுமார் 242 ஹெக்டேர் பரப்பளவில் இந்த வெப்பமண்டல தாவர மரபணு பூங்கா உருவாக்கப்

பட்டது.

இந்தப் பூங்கா குறித்து கோவை மண்டல வனப்பாதுகாவலர் கண்ணன் கூறியதாவது: ""நமது தேசிய தாவர வளங்களில் அழிந்துவரும் தாவரங்களையும், அழியும் நிலையிலுள்ள தாவரங்களையும் பாதுகாக்கும் வகையில் இப்பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து சேகரிக்கப்படும் பூக்கும் மற்றும் பூவாத் தாவரங்களை நடவு செய்து பாதுகாப்பதோடு, அழிந்துவரும் தாவர சிற்றினங்களைச் சேகரித்து நடவு செய்து அவற்றின் மரபணுக்களைக் காப்பாற்றுவதை முக்கியப் பணியாக கொண்டுள்ளோம். இந்த மரபணு பூங்கா தாவரங்களைக் குறித்த ஆராய்ச்சிக்கும், இயற்கை வளங்களைக் குறித்த ஆராய்ச்சிக்கும் சுற்றுச்சூழல் கல்விக்கும் சிறப்பு வாய்ந்த இடமாக திகழ்கிறது'' என்றார்.

இப்பூங்காவைப் பராமரித்துவரும் கூடலூர் வனக்கோட்ட அலுவலர் சதீஷ் மேலும் விளக்கமாக வனத்தின் அவசியம் பற்றி பேச ஆரம்பித்தார்.

""இந்தத் தாவர மரபணு பூங்காவானது அறிவியல் முறைப்படி ஆராய்ச்சி பணிகளைச் செய்யவும், தாவர வகைப்பாட்டியல் முறைப்படி தாவரங்களைச் சேகரம் செய்து நடவு செய்து பாதுகாக்கவும் பூங்காவின் பரப்பளவு 16 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. தாவர குடும்பங்களை நடவு செய்து பாதுகாத்து வருகிறோம்.

இங்குள்ள மரபணு சேமிப்பு மையமானது வனவகைப் பட்டியலில் சதர்ன் இண்டியன் சப் டிராப்பிக்கல் ஹில் சவானா உட்லேண்டு என்ற வகையைச் சேர்ந்ததாகும். இவற்றில் 5 சோலை வனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் 385 வகை தாவரங்கள் உள்ளன.

இந்த சோலைவனங்களில் உள்ள தாவரங்கள் தண்ணீரை சேமித்து வைக்கும் திறன் உள்ளதால் நீரோடைகள் இயற்கையாக காணப்படுகின்றன. இந்த நீர் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் மிகவும் உதவியாக உள்ளது. இந்த நீரோடைகளைப் பாதுகாக்க ஆங்காங்கே கல்லணைகளும் கட்டப்பட்டுள்ளன.

புல் தரையில் சுமார் 125 வகைகளிலான புற்கள் கண்டறியப்பட்டுள்ளன. புல் தரைகளும், சோலை வனங்களும் ஒன்றையொன்று சார்ந்து காணப்படுகின்றன. ஆனால் பல இடங்களில் புல்வெளி அழிந்து, சோலைவனமும் அழியும் என்ற நிலை இருப்பதால் இதை சூழ்நிலையின் உச்சகட்டம் (எக்காலஜிக்கல் கிளைமேக்ஸ்) எனக் கூறலாம்'' என்றார்.

இந்த மரபணு பூங்காவின் சிறப்பம்சங்களைச் சுருக்கமாக அவர் பட்டியலிட்டார்... அந்த சுவாரஸ்யமான தகவல்களில் சில:

இந்த மரபணு பூங்காவில் தாவர அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தாவரங்களின் மாதிரி மற்றும் தாதுக்களின் மாதிரி ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் சுற்றுச்சூழல் கல்வியைப் போதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரிய வகை தாவரங்களை விதையில்லா இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்வதற்காக மிஸ்ட் சேம்பர் மற்றும் கிரைஸ் ஹவுஸ் அமைப்புகள் உள்ளன.

அதேபோல ஹெர்பேரியம் அரங்கில் அனைத்து வகையான தாவரங்களின் பாகங்கள் சேகரிக்கப்பட்டு அந்தத் தாவரத்தைக் குறித்த குறிப்புகளும் வைக்கப்பட்டுள்ளன. இது தாவரங்களைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவியாக அமைந்துள்ளது. இந்த மரபணு பூங்காவிலுள்ள அரியவகை தாவரங்களைத் திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்து பூங்காவில் நடவு செய்வதற்காகவே நவீன அறிவியல் முறையிலான திசு வளர்ப்புக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டும்தான் ஆர்கிட் தாவர வகைகள் அதிகளவில் உள்ளன. இயற்கையில் ஆர்கிட் தாவரங்கள் மிக அழகாகவும், அதிக நாள் பூத்து நிலைக்கும் தன்மையுடையதாகவும் உள்ளதால் வர்த்தக ரீதியில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வனங்கள் அழிக்கப்படுவதால் ஆர்கிட் தாவரங்களும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய ஆர்கிட் தாவரங்களைப் பாதுகாக்க இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆர்கிட்டோரியத்தில் 130 வகையான ஆர்கிட் தாவரங்கள் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. அதேபோல 100 வகைகளிலான பெரணி வகை தாவரங்களைச் சேகரித்து பெரணி இல்லமும் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com