

நடிகை குஷ்பு தி.மு.க.வில் இணைந்ததையடுத்து சினிமாவில் உள்ள பலரும் அரசியலில் அடியெடுத்து வைக்கும் முடிவில் இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் திரைப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிறார்கள்.
கேப்டனுடன் மல்லுக்கட்டல், சக நடிகருடன் போலீஸ்- நீதிமன்ற பஞ்சாயத்துகளில் கலக்கிய அல்லது கலகலத்த காமெடி கைப்புள்ள விரைவில் சூரிய கட்சியில் ஐக்கியமாகும் எண்ணத்தில் இருக்கிறாராம். ஆனால் அவருடைய நல விரும்பிகள் "வேணா வுட்ரு...' என அறிவுறுத்தி வருகின்றனராம்.
"பேராண்மை' படத்தில் அறிமுகமான தன்ஷிகா, "மாஞ்சா வேலு' படத்தில் க்ளாமரில் தாராளம் காட்டியிருந்தார். இதையடுத்து "நில் கவனி செல்லாதே' படத்திலும் நீச்சல் உடையில் நடித்திருக்கிறார். "முதல் படத்தில் சிறப்பாக நடித்த நீங்கள் அடுத்தடுத்து க்ளாமராக நடிப்பது ஏன்? என்று கேட்டால்...
""நல்ல நடிகை என்பதைவிட வெற்றிப் பட நடிகையாக இருக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம். இன்றைய சூழ்நிலையில் வெற்றிப் பட நடிகைக்கு க்ளாமர் அவசியம். சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதே சிரமம். அப்படி கிடைத்த வாய்ப்பை பல கண்டிஷன்கள் போட்டு இழக்க விரும்பவில்லை.
அதனால்தான் எப்படிப்பட்ட வேடத்திலும் நடிக்க முடிவெடுத்திருக்கிறேன். சினிமாவில் எதிர்நீச்சல் போட வேண்டுமென முடிவெடுத்த பிறகு நீச்சல் உடையில் நடிப்பதில் தவறில்லையே'' என்கிறார் தன்ஷிகா.
"நாடோடிகள்' படத்துக்குப் பிறகு சமுத்திரக்கனி-சசிகுமார் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாகிறது. இந்தப் படத்தை சசிகுமார் தயாரித்து ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் தெலுங்கின் இளம் முன்னணி நடிகர் நரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். "சுப்ரமணியபுரம்' ஸ்வாதி, அஞ்சலி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
"ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட நான்கு இளைஞர்களைப் பற்றிய கதை இது. சென்னையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை'' என்கிறார் சமுத்திரக்கனி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.