சதா போடும் புலிவேஷம்!

"அந்நியன்' படத்துக்குப் பிறகு தெலுங்கிலும் ஹிந்தியிலும் கவனம் செலுத்தி வந்த சதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு "புலிவேஷம்' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். பி.வாசு இயக்கும் இந்தப் படத்தில் "எல்லாம் அவன
சதா போடும் புலிவேஷம்!
Updated on
1 min read

"அந்நியன்' படத்துக்குப் பிறகு தெலுங்கிலும் ஹிந்தியிலும் கவனம் செலுத்தி வந்த சதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு "புலிவேஷம்' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். பி.வாசு இயக்கும் இந்தப் படத்தில் "எல்லாம் அவன் செயல்', "அழகர் மலை' படத்தில் நடித்த ஆர்.கே. கதாநாயகனாக நடிக்கிறார்.

கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தாதா ஆர்.கே. } என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரி கார்த்திக் ஆகியோருக்கு இடையே நடைபெறும் பரபரப்பான சம்பவங்கள்தான் கதை.

தமிழில் ரீ என்ட்ரி பற்றி கேட்டால்... ""இதற்கு முன்பும் தமிழில் சில பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் கதை, கால்ஷீட் விஷயங்கள் சரிப்பட்டு வரவில்லை.

அதனால் தமிழில் நடிக்க இயலவில்லை. "புலிவேஷம்' படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தவிர, பி.வாசுவின் படத்தில் கதாநாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதனால் இந்தப் படத்தில் நடிக்க டபுள் ஓ.கே. சொல்லிவிட்டேன்'' என்கிறார் சதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com