பெரிய நோட்டு நடிகை!

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறும் நடிகை என்ற பெருமையைக் கேரளத்திலிருந்து வந்த அஸின் பெறுகிறார். சித்திக் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "காவல்காரன்' படத்துக்காக அஸின
பெரிய நோட்டு நடிகை!
Updated on
1 min read

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறும் நடிகை என்ற பெருமையைக் கேரளத்திலிருந்து வந்த அஸின் பெறுகிறார். சித்திக் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "காவல்காரன்' படத்துக்காக அஸினுக்கு இந்தத் தொகை சம்பளமாகப் பேசப்பட்டுள்ளது. தன்னுடைய படங்கள் தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்துக்கொண்டிருப்பதாலும் கடைசியாக வெளிவந்த "சுறா' வசூல் கடலில் நீந்த முடியாமல் கரை ஒதுங்கியதாலும் அப்செட் ஆன விஜய் தரப்பு "சிவகாசி', "போக்கிரி' படங்களின் ஹிட் சென்டிமெண்ட் காரணமாக அஸின்தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என விரும்பியுள்ளது. நாயகன் தரப்பு வேண்டி விரும்பி அழைத்ததாலும் ஹிந்திப் பட கால்ஷீட்டுக்கு மத்தியில் தமிழில் நேரம் ஒதுக்கி நடிப்பதற்காகவுமே அஸினுக்கு இத்தனை பெரிய சம்பளமாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com