பறந்து பறந்து அடிப்போம்...டக்கரா..

கோவை பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்த நம் காதில் விழுந்தது அந்த மாணவர்கள் பேசியது. ""டக்கரா அடிப்பேன்..."டக்ரா' என்றார் ஒருவர். மற்றொருவர் ""சும்மா பறந்து பறந்து அடிப்பேன்'' அவர்கள் பறந்து பறந்த
பறந்து பறந்து அடிப்போம்...டக்கரா..

கோ வை பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்த நம் காதில் விழுந்தது அந்த மாணவர்கள் பேசியது. ""டக்கரா அடிப்பேன்..."டக்ரா' என்றார் ஒருவர். மற்றொருவர் ""சும்மா பறந்து பறந்து அடிப்பேன்''

அவர்கள் பறந்து பறந்து அடிக்கும் அந்த விளையாட்டு செபக்டக்ரா. இந்தியாவில் அவ்வளவாக பிரபலமாக அந்த சர்வதேச விளையாட்டு பற்றி விளக்கம் கேட்டோம்.

""இப்படி ஒரு விளையாட்டை பலர் கேள்விபட்டிருக்கக்கூட மாட்டாங்க...'' என்று சொல்லத் தொடங்கினார் கல்லூரியின் செபக்டக்ரா கேப்டன் அஜய்கிருஷ்ணா. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் காலால் வாலிபால் விளையாடினால் எப்படி இருக்குமோ அதுதான் செபக்டக்ரா.

* கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க..?

சீனாவில் ட்சூஜூ விளையாட்டிலிருந்து செபக்டக்ரா 15ம் நூற்றாண்டில் பிறந்தது. பாங்காக் நகரத்தில் வாட் ஃப்ரா கேவ் கோயிலில் உள்ள சுவர்களில் அனுமான் வேறு குரங்குகளுடன் செபக்டக்ரா விளையாடுவது போன்ற ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

தென்கிழக்காசியவில் மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, பிலிப்பைன்ஸ், லாவோஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் மிகவும் புகழ் பெற்ற விளையாட்டு. பிலிப்பைன்ஸில் இவ்விளையாட்டை "சிபா' எனவும், தாய்லாந்தில் "டக்ரா', லாவோஸில் "க-டாவ்',அல்லது துக் தய் எனப் பல பெயர்கள் இந்த விளையாட்டுக்கு உண்டு. 1866-ல் தாய்லாந்தில் சயாம் விளையாட்டுச் சங்கத்தினரால் முதல் தடவையாக செபக்டக்ராவுக்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டன. 1990 முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவும் ஒரு விளையாட்டு.

இறகுப்பந்து ஆடுகளத்தின் அளவுகளைக் கொண்டது செபக்டக்ரா ஆடுகளம். உள் மற்றும் வெளி விளையாட்டரங்குகளில் விளையாடலாம். இதில் 5 வகையான டக்ராக்கள் உள்ளன. 1. ரேகு- இதில் மொத்தம் ஒரு அணிக்கு 5 வீரர்கள் விளையாடலாம். 3 வீரர்கள் மற்றும் 2 பதிலி வீரர்கள் இடம் பெறுவர்.

2. டபுள்ஸ்- ஒரு அணிக்கு 2 வீரர்கள் மற்றும் 2 பதிலி வீரர்கள் இடம் பெறுவர். 3.டீம் இவண்ட்- இதில் மொத்தம் 15 வீரர்கள் தலா மூன்று ரேகுகுளாக பிரிந்து விளையாடுவர். 4 பேர் ஹூப் டக்ரா: இதில் சுமார் 4.5 மீட்டர் உயரத்தில் ஒரு கூடைக்குள் காலால் அடித்து பந்தைப் போட வேண்டும். இதில் அணிக்கு 5 பேர் விளையாடலாம். 5. பீச் டக்கரா: இதில் அணிக்கு 4 பேர் விளையாடலாம் 2 பதிலி வீரர்கள் இருப்பர். பெரும்பாலும் கடற்கரை மணலில் விளையாடுவதாகும்.  செபக் டக்ரா பந்து ரப்பர் அல்லது பிரம்பு அல்லது மூங்கிலைக் கொண்டு பந்து வடிவத்தில் பின்னப்படும்.

தற்போது கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் இறுதி ஆண்டு படிக்கிறேன். பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சேர்க்கையில் இக் கல்லூரியில் சேர முயற்சி எடுத்து சாதித்தேன். என்னுடன் பயிலும் சக மாணவர்கள் 15 பேருக்கு இவ்விளையாட்டைக் கற்றுக் கொடுத்துள்ளேன். அவர்கள் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர்.

2002ஆம் ஆண்டு இக்கல்லூரியில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் பயின்ற முன்னாள் மாணவர் பாலாஜி இவ்விளையாட்டில் சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை வகித்தார். பிஎஸ்ஜி கல்லூரியில் இவ்விளையாட்டை தொடங்கி பல மாணவர்களுக்குப் பயிற்சியளித்தார். தற்போது நான் இப்பணியைச் செய்கிறேன். நண்பர்களுடன் பல பள்ளிகளுக்குச் சென்று செபக்டக்ரா விளையாட பயிற்றுவிக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com