சாயங்காலத்துச் சந்தோஷத்தை மீட்டெடுக்கும் கதை!

ஓருபுறமும் போஸ்டர் ஒட்டி, ரேடியோ ஸ்பீக்கர்களில் "இன்றே கடைசி...' என்று திரையிடப்படும் படத்தின் பராக்கிரமங்களைச் சொல்லி, சிறுவர்கள் பின் தொடர நோட்டீஸ் கொடுத்து செல்லும் கூண்டு வண்டி. அதோடு, மறக்காமல் ஒ
சாயங்காலத்துச் சந்தோஷத்தை மீட்டெடுக்கும் கதை!
Updated on
2 min read

ஓருபுறமும் போஸ்டர் ஒட்டி, ரேடியோ ஸ்பீக்கர்களில் "இன்றே கடைசி...' என்று திரையிடப்படும் படத்தின் பராக்கிரமங்களைச் சொல்லி, சிறுவர்கள் பின் தொடர நோட்டீஸ் கொடுத்து செல்லும் கூண்டு வண்டி. அதோடு, மறக்காமல் ஒவ்வொரு முறையும் கடைசியாக "ஒளி, ஒலி அமைப்பு...' என அந்தப் பகுதியின் பிரபல சவுண்ட் சர்வீஸின் முகவரியோடு காது குத்து, கல்யாணம், மஞ்சள் நீராட்டு விழா போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு அணுகச் சொல்லும் விளம்பரம். ஆடாதொடை பூக்கள் வடிவத்தில் சாயம் போயிருக்கும் அந்த ஸ்பீக்கர்களின் வசீகரத்தில் ஊர் எல்லை வரை சென்று வழியனுப்பும் சிறுவர்கள்... இப்படி மாட்டு வண்டிகளின் உதவியுடன்தான் எல்லா ஊர்களிலும் சினிமாவின் விதை விழுந்திருக்கிறது. அந்த விதைதான் கதை. ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பை கூட்டி பேசுகிறார் இயக்குநர் சரவண ஜீவன். "பரிமளா திரையரங்கம்' படத்தின் இயக்குநர்.

நல்ல கதைகளும், புது விஷயங்களும் சினிமாவில் தொடர்ந்து ஜெயிச்சிக்கிட்டே இருப்பதுதான் என்னை மாதிரியான புதியவர்களுக்கு மூலதனம். அந்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தை எடுக்கிறேன். "இப்படி ஒரு விஷயத்தை யாருமே இதுவரைக்கும் தொடலையே'ன்னு உங்களுக்கு நிச்சயம் தோணும்!

பரிமளா திரையரங்கில் என்ன இருக்கும்?

ரொம்பச் சாதாரணம் சார். எல்லா ஊர்களிலும் தியேட்டர்கள் இடிக்கப்பட்டு, வணிக வளாகங்கள், கல்யாண மண்டபங்கள் என உருவம் மாறிப் போய்விடுகிறது. கிராமத்து ஆள்களின் சாயங்காலத்து சந்தோஷம் பறிபோய்விட்டது. சாமான்யமானவர்களின் இந்த சாயங்காலத்துச் சந்தோஷத்தை மீட்டெடுப்பதுதான் இந்தக் கதையின் நாதம். சிறு நகரங்களில் தியேட்டர்கள் குறைந்துவிட்டன. டி.வி. இண்டர்நெட், செல்போன் எனத் தொடரும் கலாசார மாற்றம், இவற்றை மாற்றிப் போட்டு வேடிக்கை பார்க்குது. வாழ்க்கையில் பிரச்னைகளை எதிர்கொள்ளும் சிலருக்குச் சினிமா பார்க்கவே நேரம் இல்லை. ஆனால் தியேட்டர்களை நவீன வசதிகளுடன் நடத்தினால் நிச்சயம் படம் பார்க்க வருவார்கள். விலை பேசப்படும் தியேட்டரை ஆபரேட்டர் மகன் திறம்பட நடத்தி, தியேட்டர் முதலாளியின் மகளை கரம் பிடிப்பதுதான் கதை.

இதுக்காக 500-க்கும் மேலான தியேட்டர்களைப் பார்த்து, கடைசியில் திண்டுக்கல் பக்கம் வேடசந்தூரில் ஒரு தியேட்டரை புதுப்பித்து ஷூட்டிங் நடத்தினோம். விதவிதமான வசதிகளை ஏற்படுத்தி ரஜினி படம் வந்தால் ரஜினி கெட்டப்பிலும், கமல் படம் வந்தால் கமல் கெட்டப்பிலும் மாறி மாறி அசத்துவார் நம்ம ஹீரோ. படத்துக்காக புதுப்பித்த தியேட்டரில் இன்னைக்கு சரியான கூட்டம். தியேட்டரை தொடர்ந்து நடத்தப் போறேன் என சொன்னார் தியேட்டர் ஓனர். இதை இன்னும் சில வாரங்களில் பார்வைக்கு வைக்கப் போகிறேன். நிச்சயம் ரசிப்பீங்க. நடிகர் ஸ்ரீமன்தான் தயாரிப்பாளர். கதை கேட்டு, சூப்பர், இதில் உண்மையிலேயே வித்தியாசம் இருக்குன்னு சொல்லி ஆர்வம் தந்தார். இப்பவும் அதே ஆர்வத்தோடு இருக்கிறார்.

"ரேனிகுண்டா'வுக்குப் பின் சனுஷா இன்னும் பளிச்சிடலையே?

சத்தம் இல்லாமல், "ரேனிகுண்டா'வில் வந்து ஆச்சரியம் தந்தவர் சனுஷா. "யார் இந்தப் பொண்ணு?'ன்னு அப்பவே பலரையும் கேட்க வெச்சவர். ஆனால் அடுத்தடுத்த விஷயங்கள் அவருக்குச் சரியாக அமையாமல் போச்சு. கிராமத்து கதைக்கு ஏற்ற முகம். நிச்சயம் நம்ம கதையில் அவருக்கு சரியான ரோல். இப்போ பள்ளிக்கூடம்தான் போறாங்களாம். ஆனால் அதைத் தாண்டிய பக்குவம் அவர்கிட்டே இருக்கு. பழைய காமெடி நடிகர் ஐசரி வேலனின் பேரன்தான் நம்ம ஹீரோ. விகாஸ்னு பேரு. இதுதான் முதல் படம். சினிமா பற்றி கொஞ்சம் தெரிஞ்சும் இருக்கார். அதைவிட அர்ப்பணிப்பு நிறைய இருக்கு. பாலபரணி கேமரா. நிச்சயம் வித்தியாசமான படைப்பு ரசிகர்களுக்குக் காத்திருக்கு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com