
புத்தரின் கடைசிக் காலம். இது தெரிந்த உடன் புத்தருடைய அன்புச் சீடனான ஆனந்தன் அழுதான். கெளதம புத்தர், ""ஏன் அழுகிறாய்? எனக்கு மரணமில்லை. நான்தான் மறுபடியும் பிறப்பேன் என்று உனக்குச் சொல்லியிருக்கிறேனே?''
""சுவாமி நீங்கள் பிறப்பீர்கள். ஆனால் எங்கே, எப்படிப் பிறப்பீர்கள்? நான் எப்படி உங்களை அடையாளம் கண்டுபிடிப்பேன்?'' என்று ஆனந்தன் கேட்டான்.
புத்தர் புன்னகை செய்தபடி,""ஆனந்தா! என்னை அடையாளம் கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். அன்புடைய எல்லோரும் புத்தன்தானே'' என்று பதில் சொன்னார்.
புத்தரைப் பல சித்திகள் தெரிந்த சித்தர் ஒருவர் சந்தித்தார். புத்தரிடம் உயிருள்ள சிப்பி ஒன்றைக் கொடுத்து அந்த சித்தர், ""இந்த சிப்பிக்குள் விலை உயர்ந்த முத்து உள்ளது. சிப்பியை உடைத்து முத்தை எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றார். அதற்கு புத்தர்,""முத்து எவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கட்டுமே! ஓர் உயிரைக் கொல்வது என்பது என்னால் முடியாது! சிப்பியை நீயே எடுத்துச் செல்''என்று சொல்லிவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.