சினி மினி

"வாமனன்', "180' படங்களில் நடித்துள்ள பிரியா ஆனந்த்துக்கு காதலில் நம்பிக்கையில்லையாம். அதனால் தனக்கு ஏற்ற மணமகனைத் தேடும் பொறுப்பை "180' படத்தின் இயக்குநர் ஜெயேந்திராவிடம் ஒப்படைத்திருக்கிறார். "அவருக்
சினி மினி
Updated on
1 min read

"வாமனன்', "180' படங்களில் நடித்துள்ள பிரியா ஆனந்த்துக்கு காதலில் நம்பிக்கையில்லையாம். அதனால் தனக்கு ஏற்ற மணமகனைத் தேடும் பொறுப்பை "180' படத்தின் இயக்குநர் ஜெயேந்திராவிடம் ஒப்படைத்திருக்கிறார். "அவருக்கு ஏன் இந்தப் பொறுப்பு?' என்று கேட்டால்... ""அவர் என்னுடைய வெல்விஷர்; குரு; எனக்கு எப்போதும் நல்லது மட்டுமே செய்வார். அதனால் எனக்கு பொருத்தமான நல்ல பையனை அடையாளம் காட்டுவார்'' என்கிறார்.

கமல்ஹாசனுடன் "விஸ்வரூபம்' படத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா, இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமராக நடித்துள்ளார் என்கிறது பட வட்டாரம். இது குறித்து கேட்டால்... ""என்னிடம் அழகும் இளமையும் நிரம்பிக் கிடக்கிறது. அதை ஏன் நான் மறைக்க வேண்டும்? தவிர, கிளாமராக நடிக்க மாட்டேன் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லையே'' என்கிறார்.

ஹிந்தி, தெலுங்கு, மராத்தி, தமிழ் என அனைத்து மொழிகளிலும் விரும்பப்படும் நடிகையாக மாறியுள்ளார் ராதிகா ஆப்தே. தற்போது ருத்ரன் இயக்கத்தில் அஜ்மலுடன் "வெற்றிச் செல்வன்' படத்தில் நடித்து வரும் ராதிகா, தமிழின் இரண்டு முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார். காரணம் நாடகம். அடிப்படையில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஆன ராதிகாவுக்கு லண்டனில் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நாடகங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அதனால் சினிமா வாய்ப்பையே மறுத்திருக்கிறார்.

ஸ்ருதிஹாசனிடம் பேட்டி கேட்டால் "என்னைப் பற்றிய எல்லா விஷயங்களும் "நெட்'டிலேயே தெளிவாக இருக்கு; அதைப் படித்துக்கொள்ளுங்களேன்' என்பார். அதே போல் பெருமைக்காகத் தன்னிடம் ஆங்கிலம் பேசுபவர்களிடம் "நான் தமிழ்ப் பொண்ணு; தமிழிலேயே பேசலாமே' என்கிறார்.

"மதராசப்பட்டிணம்' நாயகி எமி ஜாக்சன், "விண்ணை தாண்டி வருவாயா'வின் ஹிந்தி ரீ மேக் ஆன "ஏக் தீவானா தா' படத்தில் பிரதீக் பபாருடன் இணைந்து நடித்தார். அவர்கள் இருவருக்கும் காதல், ரகசியத் திருமணம் செய்துகொண்டார்கள் என்றெல்லாம் மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. இது பற்றி எமி ஜாக்சனிடம் கேட்டால் ""நாங்கள் இருவரும் ஒரே வயதுக்காரர்கள்; ஒரே சிந்தனையுடையவர்கள்; இருவரும் பழகினால் தவறா? இதைப் பற்றி எங்கள் வீட்டிலேயே கண்டுகொள்ளவில்லை; மீடியாக்களுக்கு மட்டும் அப்படி என்ன அக்கறை?'' என்கிறார்.

தமிழ், தெலுங்கில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் ஆறு மராத்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார் தேஜாஸ்ரீ. மும்பையில் நடனப் பள்ளி நடத்தி வரும் தேஜாஸ்ரீ விரைவில் சென்னையிலும் ஒரு நடனப் பள்ளியைத் தொடங்கவுள்ளார். அதற்காக பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுக்குமாறு தனது மேனேஜரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அஜித்தின் "பில்லா 2' படத்தின் பெரும்பகுதி ரஷ்யாவிலிருந்து பிரிந்த ஜார்ஜியா நாட்டின் பனிப் பிரதேசத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே முதல் முறையாக எபிக் கேமராவில் படமாக்கப்பட்ட படம் என்ற பெருமையையும் "பில்லா 2' பெற்றிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com