சினி மினி

"நான் ஈ' வெற்றிக்குப் பிறகு கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டில் பல நடிகர்களும் பிரபல தயாரிப்பாளர்களும் தங்களுக்கு ஒரு படம் இயக்கித் தர வேண்டும் என "நான் ஈ' இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெüலிக்கு அன்புத்தொல்லை தந
சினி மினி
Updated on
2 min read

"நான் ஈ' வெற்றிக்குப் பிறகு கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டில் பல நடிகர்களும் பிரபல தயாரிப்பாளர்களும் தங்களுக்கு ஒரு படம் இயக்கித் தர வேண்டும் என "நான் ஈ' இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெüலிக்கு அன்புத்தொல்லை தந்து வருகிறார்கள். படத்தைப் பார்த்துவிட்டு சில வாரங்களுக்கு முன்பு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததோடு வெகு நேரம் பேசிய ரஜினிகாந்த், "அடுத்து என்ன பிராஜெக்ட்' எனக் கேட்க, பலருக்கும் படியாத ராஜமெளலி, "உங்களை வைத்து படம் இயக்குவது என் நீண்ட நாள் ஆசை. நீங்கள் ரெடி என்று சொன்னால் தொடங்கிவிடலாம்' என்று கூறியிருக்கிறார். இதையடுத்து தனக்காக 2013-2014 ல் ஒரு கதையைத் தயார் செய்யச் சொல்லியிருக்கிறார் என இரண்டு ஸ்டார் வட்டாரங்களிலும் பேச்சு அடிபடுகிறது.

 ஃபிஃப்டி கே.ஜி. தாஜ்மஹாலாகத் தோற்றமளித்த ஐஸ்வர்யா ராய், குழந்தை பெற்ற பிறகு எய்ட்டி கே.ஜி. தாஜ்மஹாலாகக் காட்சியளித்ததை ஊடகங்கள் ஊதிப் பெரிதுபடுத்தியதை அறிவோம். அதனால் கடந்த ஒரு வருடமாக எந்தப் படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளாத ஐஸ்வர்யா ராய், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபல ஜுவல்லரி நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் அண்மையில் தலைகாட்டியுள்ளார். படப்பிடிப்பிலும் சரி, விளம்பரங்களிலும் சரி ஐஸ்வர்யாவைப் பார்த்த அனைவரும் ஆச்சரியமுற்றனர். காரணம்... முறையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் தன்னுடைய உடலைக் கட்டுக்கோப்பாக மாற்றி முன்பு இருந்ததுபோல எழிலுடன் காட்சியளித்ததுதான்.

 மணிரத்னம் இயக்கத்தில் பிரபு, கார்த்திக் நடித்த "அக்னி நட்சத்திரம்' படத்தை ரீமேக் செய்வதற்காக அதன் உரிமையை பாலாஜி ரியல் மீடியா நிறுவனம் பெரும் தொகைக்கு பெற்றுள்ளது. இதில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவையும் கார்த்திக்கின் மகன் கெüதமையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. "தில்', "தூள்', "கில்லி' படங்களை இயக்கிய தரணி, இந்த ரீமேக் படத்தை இயக்குவார் என்று தெரிகிறது.

வெளிநாட்டுக் காற்று பட்டால்தான் தமிழ்ப் பாடல்களுக்கே மெட்டு போட முடியும்; பாடல் கம்போஸிங் செய்ய முடியும் என்று ஃபாரினுக்கு ட்ரிப் அடித்து இம்சையான இசையை அளிப்பது நம் "மியூசிக்வாலா'க்களின் வழக்கம். இது போதாதென்று இப்போது உலக மார்க்கெட்டைப் பிடிக்கப்போகிறோம் என்று கூறி பாடல் வெளியீட்டு விழாக்களைக் கூட ஃபாரினில் வைக்கவே விரும்புகிறார்கள். "மாற்றான்' படத்தின் பாடல்களை சிங்கப்பூரிலும் "பரதேசி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை லண்டனிலும் "கோச்சடையான்' படப் பாடல்கள் ஜப்பானிலும் வெளியாகின்றன. இதையடுத்து "விஸ்வரூபம்', "துப்பாக்கி' படக் குழுவினர், தங்களது படப் பாடல்களை எந்த நாட்டில் வெளியிடலாம் என உலக உருண்டையை உருட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

 சசிகலாவின் உறவினரான பாஸ்கரன் "தலைவன்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். சித்திரைச்செல்வன் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் ஹன்சிகாதான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என விரும்பியிருக்கிறார் ஹன்சிகா. ஆனால் தற்போது பெரிய ஸ்டார்களுடன் நடித்து வரும் ஹன்சிகாவோ புதுமுகங்களுடன் நடிக்க மாட்டேன் எனக் கூறியிருக்கிறார். அப்படியானால் "ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின் மட்டும் புதுமுகம் இல்லையா என சம்பந்தப்பட்டவர்கள் "பிரஷர்' தர ஹன்சிகாவின் "பிரஷர்' எகிறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com