சினி மினி

நயன்தாராவுடனான உறவை முறித்துக்கொண்டு மீண்டும் மனைவி பக்கம் திரும்பத் தயாராகிவிட்டார் பிரபுதேவா. இதையடுத்து தனக்கு எஸ்.எம்.எஸ். மூலம் ஆறுதல் சொன்ன சிம்புவிடம் மீண்டும் நட்பு பாராட்டத் தொடங்கியுள்ளார் ந
சினி மினி
Updated on
1 min read

நயன்தாராவுடனான உறவை முறித்துக்கொண்டு மீண்டும் மனைவி பக்கம் திரும்பத் தயாராகிவிட்டார் பிரபுதேவா. இதையடுத்து தனக்கு எஸ்.எம்.எஸ். மூலம் ஆறுதல் சொன்ன சிம்புவிடம் மீண்டும் நட்பு பாராட்டத் தொடங்கியுள்ளார் நயன்தாரா. அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்ட சிம்பு-நயன் ஆகியோரின் செல்லச் சண்டைதான் பார்ட்டியின் ஹை லைட்.

 ஆண்டுதோறும் தன் பிறந்த நாளான ஆகஸ்ட் 9-ம் தேதி, இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களின் கல்விச் செலவு, உணவு, உடை, இருப்பிடத்துக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா. ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதில் இருந்து இந்தப் பழக்கம் தொடருகிறது. அதன்படி ஹன்சிகாவுக்கு இதுவரை 22 தத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள்.

 அனுஷ்காவையும் எமி ஜாக்ஸனையும் தான் நடிக்கும் படங்களில் மட்டுமல்லாமல் தனக்கு வேண்டியவர்களின் படங்களிலும் ஒப்பந்தம் செய்ய சிபாரிசு செய்கிறார் விக்ரம்.

 நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதேவி நடிக்கும் "இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தின் ஹிந்திப் பதிப்பில் கெüரவ வேடத்தில் நடித்துள்ளார் அமிதாப். படத்தின் தமிழ்ப் பதிப்பில் நடிக்க ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் மறுக்கவே அஜித்திடம் கால்ஷீட் கேட்டனர். ஆரம்பத்தில் மறுத்த அஜித், பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை... தன்னுடைய சொந்த செலவிலேயே மும்பை சென்று, தங்கி, நடித்துக்கொடுத்துவிட்டு வந்துள்ளார். நடித்ததற்கும் சம்பளம் வாங்கவில்லை.

 நகைச்சுவையுடன் நல்ல மெஸேஜையும் சொன்ன "3 இடியட்ஸ்' மெகா ஹிட் ஹிந்திப் படத்துக்குப் பிறகு அமீர்கானும் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியும் "பி கே' என்ற படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.

 இதுவரை சுமார் 800 படங்களுக்கு மேல் நடித்துள்ள கவுண்டமணி மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருப்பவர். முன்னணி சேனல்கள் கோடி ரூபாய்க்கு மேல் தருகிறோம்; சில எபிஸோடுகளுக்கு மட்டும் தலைகாட்டினால் போதும் என்று ஆசை காட்டியும் உறுதியாக மறுத்துவிட்டார். அதே சமயம் தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களை அவராகவே அழைத்து சினிமா உள்பட நாட்டு நடப்புகள் அனைத்தையும் தன்னுடைய பாணியில் நக்கலடித்துப் பேசுவார். அப்படிப் பேசிய பேச்சில் இருந்து எதையாவது எடுத்து செய்தியாக்கி விட்டால்... அடுத்து அந்தப் பத்திரிகையாளருக்கு "தடா' போட்டுவிடுவார்.

 இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸூம் தொழிலதிபர் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து படத் தயாரிப்பில் ஈடுபட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

 ரஜினி நடித்த "தில்லு முல்லு' படம் ரீமேக் செய்யப்படுகிறது. பத்ரி இயக்கும் இந்தப் படத்தில் "தமிழ்ப்படம்' சிவா கதாநாயகனாகவும் கேரளத்தின் லேட்டஸ்ட் சூப்பர் ஹிட் படமான "தட்டத்தின் மறையத்து' படத்தின் நாயகி இஷா தல்வார் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்காக முதல்முறையாக எம்.எஸ்.விஸ்வநாதனும் யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com