

செருப்புகளை தேர்ந்தெடுக்கும்போது அளவு மற்றும் அழகு ஆகியவற்றை அந்தந்த கால்களுக்கு பொருத்தமாக இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும்.
தேர்ந்தெடுத்த செருப்புகளை அணிந்துகொண்டு நான்கைந்து அடி நடந்து பார்த்து, நடப்பதற்கு இலகுவாக இருந்தால்தான் வாங்க வேண்டும்.
பொதுவாக பெண்களின் பாதங்கள் மென்மையானவை. எனவே அதிக இறுக்கமான செருப்புகளை வாங்கக்கூடாது. இறுக்கமான செருப்புகளால் ரத்த ஓட்டம் தடைபடும்.
விலை குறைந்த தரமில்லாத செருப்புகளை வாங்குவதைக்காட்டிலும், சிறிது விலை கூடினாலும் தரமான செருப்புகளையே வாங்க வேண்டும்.
தோல் செருப்புகளை தண்ணீரில் நனையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நனைந்தால் செருப்பின் ஆயுள் குறையும்; பாதங்களுக்கும் பொருத்தம் இல்லாமல் போகும்.
தரையில் வழுக்காமல் க்ரிப் உள்ள செருப்புகளை வாங்க வேண்டும்.
மழைக்காலத்தில் ரப்பர் செருப்புகளை அணியக்கூடாது. ரப்பர் செருப்புகள் நடக்கும்போது வழுக்கிவிடுவதுடன், துணிகளில் சேற்றை வாரி இறைத்துவிடும்.
அடுத்தவரின் செருப்புகளை அணியக்கூடாது. இதனால் ஒவ்வாமை ஏற்படும்.
ரப்பர், பிளாஸ்டிக் செருப்புகளை அணியும் பெண்கள் அவற்றை தினமும் கழுவி சுத்தம் செய்து உபயோகிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.