விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

எனது அழகின் ரகசியம்!

தொலைக்காட்சி பார்ப்பவர்கள் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிகிறதோ என்னவோ விளம்பரங்களைப் பார்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். தங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிûளை எவ்வாறு பார்க்கிறார்களோ அதே போன்ற

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:16 am

ஃப்ரீடா ஃப்ராங்ளின்

தொலைக்காட்சி பார்ப்பவர்கள் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிகிறதோ என்னவோ விளம்பரங்களைப் பார்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். தங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிûளை எவ்வாறு பார்க்கிறார்களோ அதே போன்று தங்களுக்கு பிடித்தமான விளம்பரங்களையும் ஆவலுடன் பார்த்து ரசிக்கிறார்கள். இதனால் விளம்பரங்களில் நடிக்கும் மாடல்கள், நடிகர்களின் முகமும் வெகுவாகப் பரிச்சயப்பட்டுவிடுகிறது. அப்படி நாம் அடிக்கடி பார்த்து பரிச்சயப்பட்டவர்தான் அனுஷ்கா ஷர்மா. பெரும்பாலான தொலைக்காட்சி விளம்பரங்களில் இவரைப் பார்க்கலாம். உதாரணமாக, அருண் ஐஸ்க்ரீம் ஐ-கோன், ஸ்பின்ஸ் பவுடர், நிவ்யா, கேனான் கேமிரா, விஸ்பர், ஃபியட் கார், பாராசூட் தேங்காய் எண்ணெய், நாதெல்லா ஜூவல்லரி என அடுக்கிக் கொண்டே போகலாம். எந்த ஒரு சூழ்நிலைக்கும் பொருந்தும் முகம் என்பதால், இவரை பல்வேறு நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில் நடிக்க வைக்க போட்டி போடுகின்றன. டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டி வகைகளுக்கு விளம்பரத் தூதராகவும் அண்மையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரில் பிறந்து வளர்ந்த அனுஷ்காவின் தந்தை ராணுவத்தில் கர்னலாக பணிபுரிந்து வருகிறார். மாடலிங் துறையில் வெற்றிகரமாக உலா வந்துகொண்டிருக்கும் இவரை பாலிவுட் வெள்ளித்திரை மெல்ல தன்பக்கம் இழுத்துக்கொண்டது. தன் பாலிவுட் அனுபவங்கள் குறித்தும், தன்னைக் குறித்தும் கூறுகிறார் அனுஷ்கா:

""பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். மாடலிங்கில் ஈடுபட்ட சமயம் அப்பாவியாக இருந்த நான் இப்போது மிகவும் தைரியமான பெண்ணாக மாறிவிட்டேன். நான் கற்பனை செய்து வைத்திருந்த மாதிரி உலகம் இல்லை. என்னைப் போல் அல்லாத, என் கருத்துக்களுக்கு முரணானவர்களையும் நான் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.

நடிப்பு என்பது எனக்கு இயல்பாகவே வரும் விஷயம்தான். அதற்காக நான் மெனக்கெடுவதும் இல்லை. திரைப்பட கதாபாத்திரங்களில் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். நான் என்னுடைய குணத்திற்கு ஏற்ற கதாபாத்திரங்களிலேயே நடிக்க விரும்புகிறேன். ஒரு படத்தைவிட அடுத்த படத்தில் இன்னும் நன்றாக நடிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

பாலிவுட்டைப் பொருத்தவரை கவர்ச்சி என்ற விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உடலைக் கச்சிதமாக வைத்திருப்பதுதான் ஒரு பாலிவுட் நடிகையின் தலையாய கடமை. எனவே என்னுடைய உணவிலும், அன்றாட நடவடிக்கைகளிலும் மிகவும் கவனமாக இருக்கிறேன். என் உடலியக்க விகிதத்தை சரியாக பராமரித்து வருவதால், நான் அவ்வளவு எளிதாக வெயிட் போட மாட்டேன். எனவே உணவு விஷயத்தில் கட்டுப்பாடாகவே இருக்கிறேன்.

என்னுடைய அழகின் ரகசியம் ஓட்டப் பயிற்சி, யோகா, ஏரோபிக்ஸ். முகத்தைப் பராமரிக்க வேம்பு ஃபேஸ் பேக் தான் என் சாய்ஸ். சாப்பாடைப் பொருத்தவரை சாதம், குழம்பு, என் பெற்றோரின் இடமான உத்தர்

கண்ட் மாநில சாப்பாட்டு வகைகள், பட்டர் சிக்கன் ஆகியவை என் தட்டில் இடம்பிடிக்கும். வீட்டு சாப்பாட்டைத் தான் அதிகம் விரும்பி உண்பேன். கூடுமானவரையில் அதையே உட்கொள்ளவும் செய்கிறேன். சாப்பாட்டுக்கு இடையில் நொறுக்குத் தீனிகளுக்குப் பதில் பழங்கள்தான் என் தேர்வு. மற்றவர்களுக்கும் நான் இதையேதான் பரிந்துரைக்கிறேன்.

புத்தகங்கள் வாசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. வீட்டிலேயே ஒரு சிறிய நூலகம் ஒன்றை நான் உருவாக்கி வைத்துள்ளேன். ஊர் சுற்றுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் மலை ஏறுவது, வீரசாகசங்களில் ஈடுபடுவது என்றால் கொள்ளைப் பிரியம். இரவு நேரத்தில் மலைகளில் காடுகளில் கேம்ப் ஃப்யரில் ஈடுபடுவது, மீன் பிடிப்பது, பரிசல் பயணம் ஆகியவற்றுக்கு நான் அடிமை. விடுமுறை நாள்களில் உடல் பராமரிப்பு மையங்களில் (வெல்னெஸ் ஸ்பா) குடிகொண்டு விடுவேன்.

என்னுடைய வேலை, மற்றவர்களுடனான உறவுமுறை, கர்மா ஆகியவைதான் என்னை ஆன்மிகத்தில் இணைக்கிறது. அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் செல்வதுண்டு. மற்றபடி என் குடும்பத்தினருடன் நான் எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுகிறேன்.

உலகம் ஒரு நாடகமேடை; நாம் எல்லோரும் நடிகர்கள். அவரவர் கதாபாத்திரத்தை மேடையேற்றுவதற்காகத்தான் நாம் இங்கே இருக்கிறோம். நமக்கு எது நடக்க வேண்டும் என்பது நம்மை உருவாக்கிய கடவுளுக்குத் தெரியும். அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்'' என்கிறார் அனுஷ்கா ஷர்மா.

-----------------------------------

பிடித்த நிறம் :  கருப்பு, வெள்ளை, சிவப்பு

பிடித்த உடை :  சேலை, ஜீன்ஸ், டி-சர்ட்

பிடித்த உணவு :  இந்திய, சீன, தாய்லாந்து உணவு வகைகள்

பிடித்த பானம் : இளநீர்

பிடித்த பழங்கள் :  ஆப்பிள், வாழைப்பழம்

பொழுதுபோக்குகள் : நடனம், இசை கேட்பது, வாசிப்பது

கனவு தேசம் :  கேரளா, லண்டன்

-----------------------------------

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.