சினி மினி

ஆக்ஷன் கிங் அர்ஜுனின் 150 வது படமான "பிரசாத்' தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. அர்ஜுனின் கனவுப் படமான இதில் ஒரு சண்டைக் காட்சி கூட இல்லை. இந்தப் படத்தில் அர்ஜுனின் மகனாக
சினி மினி
Updated on
2 min read

ஆக்ஷன் கிங் அர்ஜுனின் 150 வது படமான "பிரசாத்' தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. அர்ஜுனின் கனவுப் படமான இதில் ஒரு சண்டைக் காட்சி கூட இல்லை. இந்தப் படத்தில் அர்ஜுனின் மகனாக கண் பார்வை இல்லாத, காது கேளாத பையனாக "பிரசாத்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சங்கல்ப், உண்மையிலேயே வாய் பேச இயலாத ஏழு வயது சிறுவன். மனோஜ் சத்தி இயக்க, இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் பெர்லின் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிக்கும் "நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகள் அனைத்தும் ஹங்கேரியில் நடைபெறுகிறது. இந்தப் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா, தனது மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன்ஷங்கர் ராஜா ஆகியோருடன் இணைந்து ஒரு பாடலைப் பாடுகிறார்.

இயக்குநரும் நடிகருமான பெரோஸ்கான் இயக்கும் புதிய படம் "கீரிப்புள்ள'. யுவன், "தமிழ்ப் படம்' நிஷா பாண்டே ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் கஞ்சா கருப்பு. இதுவரை 200 படங்களில் நடித்துள்ள கஞ்சா கருப்பு, இந்தப் படத்தில் முதல் முறையாக பெண் வேடத்தில் நடித்திருப்பதே காரணம்.

கேரளத்தில் வரும் மார்ச் 25-ம் தேதி நடைபெறவுள்ள ஒரு ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பாலிவுட்டின் முன்னணி நடிகை கேத்ரினா கைஃப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். மேடையில் 10 நிமிடம் "கேட் வாக்' செய்வதற்கு அவருக்குப் பேசப்பட்டுள்ள சம்பளம் ரூ.1 கோடி மட்டுமே!

சோனியா அகர்வால் "சவுண்ட் கேரேஜ்' என்ற பெயரில் சென்னையில் இசைப் பள்ளி ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இந்தப் பள்ளியைத் தொடங்கி வைத்ததோடு மட்டுமல்லாமல் தனது இசைத்துறை நண்பர்களை ஆசிரியர்களாக பயன்படுத்திக்கொள்ளுமாறு சிபாரிசும் செய்துள்ளார்.

ரஜினியின் "கோச்சடையான்' படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் அனைவருமே இரட்டை வேடங்களில் நடிப்பதாக இயக்குநர் செüந்தர்யா யூனிட்டில் பேசப்படுகிறது. ஒருவர் மட்டும் விதிவிலக்கு. அவர் மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் கிராஃபிக்ஸில் மாற்றியமைக்கப்படுகின்றன. இதற்காக பட யூனிட் ஸ்ரீதரின் சூப்பர் ஹிட் "காதலிக்க நேரமில்லை' படத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.

ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற வரலாற்று நாடகமான "மேக்பத்'தை தியேட்டர் லேப் நடிப்புப் பயிற்சி நிறுவனம் மேடையில் அரங்கேற்றவுள்ளது. சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மே மாதம் 1 முதல் 5-ம் தேதி வரை மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த நாடகத்தில் "அரவான்' நாயகன் ஆதி முக்கிய வேடமேற்று நடிக்கிறார். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், இயக்குநர்கள் பாரதிமோகன், மு.களஞ்சியம், திருச்செல்வம், கரிகாலன், நடிகர்கள் ராஜேஷ், போஸ்வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

செல்வராகவன் இயக்கும் "இரண்டாம் உலகம்' படத்தில் அனுஷ்கா - சாந்த சொரூபி, சாகசம் செய்யும் அடிதடி நாயகி என இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com