சினி மினி

கடந்த வாரம் பாங்காங் சென்றுவிட்டு சென்னை திரும்பிய நயன்தாராவிடம் விமான நிலைய அதிகாரிகள் 40 நிமிடங்களுக்கு மேல் விசாரணை நடத்தினர். நயன்தாராவின் சூட்கேஸில் ரூ.20 லட்சம் பணம் இருக்கிறது. அது எப்படி வந்தத
சினி மினி
Updated on
1 min read

கடந்த வாரம் பாங்காங் சென்றுவிட்டு சென்னை திரும்பிய நயன்தாராவிடம் விமான நிலைய அதிகாரிகள் 40 நிமிடங்களுக்கு மேல் விசாரணை நடத்தினர். நயன்தாராவின் சூட்கேஸில் ரூ.20 லட்சம் பணம் இருக்கிறது. அது எப்படி வந்தது? என விசாரியுங்கள் என வந்த தொலைபேசி தகவலால்தான் இந்தச் சோதனையாம். இது குறித்து கேட்டால்... ""மூக்கு ஆபரேஷன் செய்ய, பிரபு என்று பச்சை குத்திய பெயரை அழிக்க பாங்காங்க் சென்றார் என்பதையடுத்து வரும் மூன்றாவது வதந்தி இது. இவற்றில் எதுவுமே உண்மையில்லை. அனைத்துப் பயணிகளுக்கும் நடைபெறும் வழக்கமான சோதனைதான் அது'' என்கிறது நயன்தாரா தரப்பு.

திரு இயக்கத்தில் விஷால், த்ரிஷா நடிக்கும் "சமரன்' படத்தின் தலைப்பு "சமர்' என மாற்றப்பட்டுள்ளதற்கு சீமானின் நாம் தமிழர் கட்சியே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தத் தலைப்பை ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருந்த சீமான் அதைப் புதுப்பிக்க மறந்துவிட்டாரம். "சமரன்' தொடங்கிய பிறகு திருவிடம் பேசி தலைப்பு விஷயம் குறித்து பேசியிருக்கிறார். இந்நிலையில் திருவுக்கும் விஷாலுக்கும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொலைபேசியில் தொடர்ந்து "பேச', எதற்கு விவகாரம் என தலைப்பை மாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மணிரத்னத்தின் ஃபேவரைட் விளையாட்டு கோல்ஃப். ரசிப்பதோடு மட்டுமல்லாமல் விளையாடுவதிலும் தீவிர ஆர்வம் உடையவர். இதுவரை தமிழகத்தில் உள்ள அனைத்து கோல்ஃப் மைதானங்களுக்கும் சென்று விளையாடியிருக்கிறார்.

சென்டிமெண்ட் காரணமாக கடந்த நான்கு வருடங்களாக தனது இடையில் அணிந்திருந்த தங்க அரைஞாண் கயிறை ஏலம் விட முடிவு செய்திருக்கிறார் டாப்ஸி. ஏலத்தில் வரும் தொகையை ஹைதராபாத்தில் உள்ள அனாதை இல்லம் ஒன்றுக்கு நன்கொடையாகக் கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

ஜீவா, சமந்தா நடிக்கும் "நீதானே பொன்வசந்தம்' படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் இயக்கி வந்தார் கெüதம் மேனன். ஆனால் இப்போது தமிழ், தெலுங்குப் பதிப்புகளின் படப்பிடிப்பு மட்டும் ஒரே சமயத்தில் நடக்கிறது. "விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் ஹிந்தி ரீமேக் ஆக உருவான "ஏக் தீவானா தா' படம் பாலிவுட்டில் தோல்வியடைந்ததே இதற்கு காரணம்.

"வெப்பம்', "கழுகு' படங்களின் மூலம் கவனம் ஈர்த்த பிந்து மாதவி, தன்னுடைய பெயரை பிந்து சாகர் என மாற்றிக்கொண்டுள்ளார். ஜோதிடம், நியூமராலஜி, நேமாலஜி போன்ற விஷயங்கள் எல்லாம் காரணம் இல்லை. அவருடைய பாசத்துக்கு பாத்திரமான அண்ணன் சாகர் திடீரென இறந்துவிட்டதால் அவர் மேல் கொண்ட அன்பு காரணமாக பிந்து என்ற பெயருடன் சாகர் என்ற பெயரை இணைத்துக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com