சினி மினி

மலையாளத்தில் ஹிட்டான "ட்ராபிக்' படத்தை தமிழில் ராதிகா தயாரிக்கிறார். ஷாஹித் காதர் இயக்கி, சரத்குமார், பிரகாஷ்ராஜ், சேரன், பிரசன்னா ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு "சென்னையில் ஒரு நாள்' எனப் பெய
Updated on
2 min read

மலையாளத்தில் ஹிட்டான "ட்ராபிக்' படத்தை தமிழில் ராதிகா தயாரிக்கிறார். ஷாஹித் காதர் இயக்கி, சரத்குமார், பிரகாஷ்ராஜ், சேரன், பிரசன்னா ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு "சென்னையில் ஒரு நாள்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. பெரும்பகுதி படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் மிகச் சிறப்பாக வந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.


 சசி இயக்கத்தில் "பூ' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பார்வதிக்கு தமிழில் பல வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால் அவற்றை அவர் மறுத்துவிட்டார். கதையே இல்லாமல் வெறுமனே டூயட் பாட மட்டும்தான் அழைக்கிறார்கள். அப்படியெல்லாம் என்னால் நடிக்க முடியாது. ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் நான்கு நல்ல படங்களில் நடித்தால் போதும் என்கிறார் பார்வதி.


 தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் மலையாளத்தில் நடித்து வருகிறார் பூர்ணா. இந்நிலையில் "சேட்டக்காரி' என்ற மலையாளப் படத்தில் நடிக்கும்போது அதன் நாயகன் ஹேமந்துடன் காதல். அதனால் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஷாம்னா கசிம் என்ற பூர்ணா மதம் மாறப் போவதாக செய்திகள் வெளியாகின. இதுபற்றி கேட்டால்... ""மதம் என்னுடைய அடையாளம். காதல் உள்பட எதற்காகவும் அதை விட்டுக்கொடுக்க மாட்டேன்'' என்கிறார்.


 ஓய்வு நேரத்தில் புடவைகளில் எம்ப்ராய்டரிங் செய்து நட்பு வட்டத்துக்குக் கொடுப்பது பூர்ணிமா பாக்யராஜின் வழக்கம். இதற்கு நல்ல வரவேற்பு இருக்கவே எம்ப்ராய்டரிங் செய்வதற்காகவே தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி புடவைகளில் விதவிதமாக தன்னுடைய கை வண்ணத்தைக் காட்டி விற்பனையில் கலக்கி வருகிறார் பூர்ணிமா.


 தான் நடிக்கும் படங்களில் கதாநாயகியாக நடிக்க ஓவியாவுக்கு விமல் சிபாரிசு செய்கிறார் என்பது திரையுலகில் பலரும் அறிந்த ஒன்று. இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட வீண் சச்சரவு காரணமாக இனி நான் ஓவியாவுக்கு சிபாரிசு செய்ய மாட்டேன் என கூறியிருக்கிறார் விமல். இதைக் கேள்விப்பட்ட ஓவியா, இதுவரை எனக்காக யாரும் சிபாரிசு செய்யவில்லை. யாரும் சிபாரிசு செய்யத் தேவையில்லை. என் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என காட்டத்துடன் கூறி வருகிறார்.


 "ஓ.கே. ஓ.கே' உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய மகன் இன்பநிதியின் பெயரை தன்னுடைய கையில் பச்சை குத்தியிருக்கிறார். எழுதப் படிக்கத் தொடங்கியுள்ள சிறுவன் இன்பநிதி அவனுடைய பெயரை ஒரு நோட்டில் எழுத அதை ஸ்கேன் செய்து அதே வடிவில் பச்சை குத்தியிருக்கிறார் உதயநிதி.
 சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் "ராம் லீலா' படத்தில் நடிக்கவிருந்த கரீனா கபூர் அந்தப் படத்திலிருந்து விலகி விட்டார். விரைவில் சயிஃப் அலிகானை மணமுடிக்கவுள்ள கரீனா கபூரை படம் முடியும் வரை கர்ப்பம் தரிக்கக்கூடாது என சஞ்சய் லீலா பன்சாலி நிர்ப்பந்தித்ததுதான் காரணம்.


 எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய "சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் ரீமேக்கை அவரது உறவினர் சினேகா இயக்கி வருகிறார். இதில் ரீமா சென், பியா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்காக எடுக்கப்பட்ட ஒரு ஹெலிகாப்டர் சம்பந்தப்பட்ட காட்சியில் பியா ஹெலிகாப்டரிலிருந்து விழுந்துவிட்டார். காயத்துடன் மயிரிழையில் உயிர் தப்பினார் என செய்திகள் வெளியாகின. இது குறித்து பியாவிடம் கேட்டால்... ""அப்படியா, ஆக்ஸிடென்ட்டா...! எப்போது? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்'' என்றார். விசாரித்துப் பார்த்தால் விளம்பரத்துக்காக பட யூனிட் இதுபோன்ற செய்திகளைப் பரப்பி வருகிறது என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com