சினி மினி

"தெய்வத்திருமகள்' பட ஷூட்டிங்கின் போதே விக்ரமின் அடுத்த படத்தை இயக்குநர் விஜய் இயக்கப் பேச்சு நடந்தது. அமெரிக்காவில் சிறு வயதிலேயே பார்வையை இழந்த டேனியல் கிஷ் என்பவர் "எகோ லொகேஷன்' எனப்படும் செவி வழி
சினி மினி
Updated on
2 min read

"தெய்வத்திருமகள்' பட ஷூட்டிங்கின் போதே விக்ரமின் அடுத்த படத்தை இயக்குநர் விஜய் இயக்கப் பேச்சு நடந்தது. அமெரிக்காவில் சிறு வயதிலேயே பார்வையை இழந்த டேனியல் கிஷ் என்பவர் "எகோ லொகேஷன்' எனப்படும் செவி வழி பார்க்கும் திறன் மூலம் வாழ்ந்து வருகிறார். அவரின் விடியோவை பார்த்த பின்புதான் "தாண்டவம்' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் விக்ரம். இப்படத்தில் டேனியல் கிஷ்ஷூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பிரியங்கா சோப்ராவின் அப்பா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை சமீபத்தில் அறுவை சிசிக்சைக்காக அமெரிக்கா கொண்டு சென்றனர். சிகிச்சை முடிந்ததும் மகளை அழைத்து, ""உன் திருமணத்தை பார்க்க வேண்டும் போல இருக்கிறது'' என சொல்லியிருக்கிறார். அந்த இடத்திலேயே ""மாப்பிள்ளையைப் பாருங்கள்'' என சொல்லிவிட்டாராம். ""எனக்கு திருமண வாழ்க்கையின் மேல் எப்போதும் பிரியம் அதிகம். அதற்கு இப்போதுதான் நேரம் கூடி வந்திருக்கிறது. எனக்கான நபர் யாரென்றுதான் தெரியவில்லை'' என டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

ராணாவுக்கும் திரிஷாவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்துக் கொள்ள போவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவில் இருவரும் கலந்து கொண்டனர். அங்கிருந்த நிருபர் ஒருவர் ""உங்கள் இருவருக்கும் காதல் என்று கிசு கிசு வருகிறதே'' என த்ரிஷாவிடம் கேட்ட போது, ""நாங்கள் நண்பர்கள்'' என்ற பதிலையே ரிப்பிட் செய்தார். இதே கேள்வியை ராணாவிடம் கேட்ட போது அவர் சிரித்தபடியே நழுவி விட்டார்.

"சிங்கம் -2' படத்துக்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் குத்துப் பாடல் ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்தப் பாடலில் முன்னணி நடிகை ஒருவரை சூர்யாவுடன் ஆட வைக்க இயக்குநர் ஹரி திட்டமிட்டுள்ளார். ஸ்ரேயா இதுவரை சூர்யாவுடன் ஜோடி சேரவில்லை. இதனால் ஸ்ரேயாவுக்கு அதிக வாய்ப்பு இருந்தது. தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய சினிமாக்களில் பிஸியாக இருப்பதால் இவரின் கால்ஷீட்டை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறதாம். இதனால் ரிச்சா கங்கோபாத்யா அந்தப் பாடலுக்கு ஆடுவார் என தெரிகிறது.

சினிமாவில் இருபது ஆண்டுகளை முடிக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பலரின் இசைக்குழுவில் பணியாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் 1992-ம் ஆண்டு "ரோஜா' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இரண்டு ஆஸ்கர் விருதுகள், கிராமி விருது, கோல்டன் குளோப் விருது, இந்திய அரசின் தேசிய விருதுகள், மாநில அரசு விருதுகள், பிலிம் பேர் விருதுகள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் இவர் இசைப் பயணத்தை அலங்கரிக்கின்றன. எந்த இந்திய இசையமைப்பாளரும் தொடாத சாதனை இது.

"அது ஒரு கனாகாலம்' படத்துக்கு பின் பாலுமகேந்திரா இயக்கி வரும் படம் "தலைமுறைகள்'. இயக்குநர் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுகுறித்து தன் வலைப்பூவில் கூறுகையில், ""மூடுபனி' தொடங்கி "அது ஒரு கனாகாலம்' வரை என் எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான் இசை. "தலைமுறைகள்' படத்துக்கும் இளையராஜாதான் இசை. இதை இன்னும் இளையராஜாவிடம் சொல்லவில்லை. படத்தை முடித்து விட்டு போட்டுக் காண்பிப்பேன். அதன் பின்தான் இசையமைக்க சொல்லுவேன். இன்னும் ஐந்தாறு படங்களாவது செய்து விட்டு போக வேண்டும் என்பது என் எண்ணம். அவற்றுக்கும் இசை இளையராஜாதான்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார் பாலுமகேந்திரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com