ஸ்மார்ட் கார்!

இந்தியாவில் கார்கள் என்பது ஆடம்பர பொருள்களின் வரிசையில்தான் இப்போதும் உள்ளது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் கார்கள் இடம் பெற்றுள்ளன.
ஸ்மார்ட் கார்!
Updated on
1 min read

இந்தியாவில் கார்கள் என்பது ஆடம்பர பொருள்களின் வரிசையில்தான் இப்போதும் உள்ளது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் கார்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவில் ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களை வைத்திருப்பது போல, தங்கள் ரசனைகளுக்கு ஏற்ப ஒன்றுக்கும் மேற்பட்ட கார்களை வைத்திருப்பது வளர்ந்த நாடுகளின் பணம்படைத்தோரின் மனோபாவமாக உள்ளது.

இந்தகைய வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் வித்தியாசமான கார்களைத் தயாரிப்பதில் பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

இப்போட்டியில் முன்னணியில் உள்ள ஜப்பானின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, காரையும் ஸ்மார்ட் போனையும் இணைத்து கற்பனை செய்தபோது உருவானதுதான் "ஃபன் வீ' கார்கள். செல்போன்களில் தீம்களை மாற்றுவது போல இந்த காரின் தோற்றத்தை நமது விருப்பத்துக்கு ஏற்ப வண்ணமயமான டிசைன்களில் "டச்-ஸ்க்ரீன்' மூலம் மாற்றிக் கொள்ள முடியும் என்பதுதான் இதன் முக்கிய சிறப்பம்சம்.

இக்கார்களுக்கு வெளிப்புறத்தை மட்டுமல்லாது, உள்புறத்தையும் விருப்பத்துக்கு ஏற்ற தீம்களை செட் செய்து கொள்ள முடியும். "டோயோட்டா ஃபன் வீ' என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த கார், பார்ப்பவர்கள் அனைவரையுமே வியப்பில் ஆழ்த்தி வருகிறது. நிமிடத்துக்கு நிமிடம் காரின் வெளித் தோற்றமும், உள்ளமைப்பும் மாறுகிறது என்றால் சும்மாவா!

ஒரு ஸ்மார்ட் போனில் உள்ள அத்தனை அம்சங்களும் இந்தக் காரில் உள்ளன. காரின் வெளிப் பகுதி "டச் ஸ்கிரீனா'கவும் செயல்படுகிறது. இவை காரின் முன்பக்க கண்ணாடி, டேஷ் போர்ட் என காரின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவடைகிறது. "ஸ்மார்ட் போன் ஆன் வீல்ஸ்' என்று டொயோட்டா இந்த காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

3 பேர் மட்டும் பயணிக்கும் வகையில் உள்ள இந்த காரின் பெரும்பாலான இயக்கத்தை ஸ்மார்ட் போன் மூலமும் கட்டுப்படுத்த முடியும். விமானங்களில் உள்ளது போன்ற ஆட்டோ பைலட் வசதியும் இந்தக் காரில் உள்ளது.

இதுவரை கண்களைக் கவரும் வண்ணங்களில்தான் கார்கள்தான் வந்துள்ளன. இந்த கார் கண்களுக்கு விருந்தளிப்பதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com