நான் தமிழ்ப் பொண்ணு!

"புகைப்படம்' மூலம் மனசுக்குள் ப்ளாஷ் அடித்தவர் ப்ரியா ஆனந்த். "180', "இங்கிலீஷ் விங்கிலீஷ்' மூலம் இன்னும் ஈர்த்தார். "எதிர்நீச்சல்' ரிலீசுக்கு காத்திருந்தவரை சந்தித்து உரையாடிய நிமிடங்களிலிருந்து...
நான் தமிழ்ப் பொண்ணு!
Published on
Updated on
2 min read

"புகைப்படம்' மூலம் மனசுக்குள் ப்ளாஷ் அடித்தவர் ப்ரியா ஆனந்த். "180', "இங்கிலீஷ் விங்கிலீஷ்' மூலம் இன்னும் ஈர்த்தார். "எதிர்நீச்சல்' ரிலீசுக்கு காத்திருந்தவரை சந்தித்து உரையாடிய நிமிடங்களிலிருந்து...
 
 தமிழ் சினிமாவைப் பிடித்திருக்கிறதா...?
 பிடித்திருக்கிறது. என்னுடைய முதல் எண்ட்ரி என் தாய் மொழியான தமிழில்தான். ஆமாங்க, நான் தமிழ் பொண்ணுதான். தமிழில் எண்ட்ரி ஆனதால் எந்த சிரமமும் இல்லை. பின்பு தெலுங்கு பட வாய்ப்புகள். இருந்தாலும் எப்போது தமிழுக்குப் போவோம் என்று எதிர்ப்பார்ப்பு இருந்தது. திடீரென்று ஹிந்தியிலும் சில வாய்ப்புகள். தமிழ் வாய்ப்புக்காக காத்திருந்தபோது, தனுஷ் சார் அழைத்து "எதிர்நீச்சல்' வாய்ப்பு தந்தார்.
 "இங்கிலீஷ் விங்கிலீஷ்' மூலமாக ""இந்த பொண்ணுக்குள்ளும் ஏதோ இருந்திருக்கு''ன்னு தெரிந்து கொண்டோம். அதன் பின் வருகிற "எதிர்நீச்சல்' உங்களுக்கு எப்படிப்பட்ட இடத்தை கொடுக்கும்...?
 சினிமாவில் சில சிலிர்ப்பான அனுபவங்களைக் கொடுத்த படம் அது. சினிமாவுக்கு வந்த நான்கு வருடங்களில் நான்கே படங்கள்தான் நடித்திருக்கிறேன். இது தமிழில் எந்த நடிகையும் செய்யாத சாதனை. "புகைப்படம்' படத்துக்குப் பின் நிறைய பேர் கேட்டார்கள். ஏதோ ஒரு கதையில் நடித்து விட்டு சம்பளம் வாங்க விருப்பம் இல்லை. அதனால்தான் தேர்வு செய்து சில படங்களில் மட்டுமே நடித்தேன். ஆனால் நல்ல உழைப்பைத் தந்தால் பலன் இருக்கும் என்று மட்டும் தோன்றியது. "180' என்னை அழகாக காட்டியது. அதன் பின் வந்த படங்களும் மனசுக்கு நெருக்கமாக இல்லை. ஸ்ரீதேவி மேடம் நடிக்கிறாங்கன்னு சொன்னதும், கதை கேட்காமலேயே போய் விட்டு வந்தேன். மறக்க முடியாத சினிமா "இங்கிலீஷ் விங்கிலீஷ்'. அந்த அடையாளம் ஹிந்தியிலும் நல்ல வாய்ப்புகளைத் தேடி தந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் அது மாதிரியான இடம் வேண்டும் என்று நினைத்தேன். அந்த இடத்துக்கான படம்தான் "எதிர்நீச்சல்'. இதுவும் சிலிர்க்க வைக்கும்.
 பட ஸ்டில்களில் இதுவரை பார்க்காத அளவுக்கு கிளாமராக இருக்கீங்க... முன்னணி இடத்துக்கு அதுதான் சரியென்று முடிவு செய்து விட்டீர்களா...?
 அது சரியாக வருமா என்று தெரியவில்லை. சில நேரங்களில் தோன்றும். ஆனால் செய்து பார்க்க தைரியம் இல்லை. "180' படத்தில் அழகான கிளாமர் இருந்தது. ஆனால் அது கண்களை உறுத்தாத கவர்ச்சி. அது மாதிரிதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஹீரோயினுக்கான கதைகள் எப்போதுமே குறைவுதான். "இங்கிலீஷ் விங்கிலீஷ்' படம் மூலம் ஸ்ரீதேவி மேடத்துக்கு தந்த முக்கியத்துவத்தை தமிழில் யாராவது கொடுக்க முன் வருவார்களா? ஹீரோயினை முன்னிறுத்தி படங்கள் வருவதில்லை. ஹீரோவுடன் நாலு டூயட்டைத் தாண்டி எதுவுமே யோசிக்க முடியவில்லை. முன்னணி இடத்துக்கு கிளாமர்தான் முக்கியம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு கேரக்டரில் ஊடுருவி கிளாமர் செய்தால் நன்றாக இருக்கும். ஒரு பாடலுக்காக, காரணமே இல்லாத காட்சிக்காக கிளாமர் செய்ய நான் தயாரில்லை. "வானம்' படத்தில் அனுஷ்காவின் கிளாமர் கண்களை உறுத்தாமல் இருந்தது இதற்கு உதாரணம். அதுதான் நல்ல கிளாமர். அது மாதிரியான சில காட்சிகள் இதிலும் இருக்கும்.
 சிவகார்த்திக்கேயன் எப்படி... "ஜாலி' டி.வி. பையனாச்சே...?
 அவர் ரொம்ப "கூலி'. அவருக்கு கோபமே வராது. எது சொன்னாலும் கமெண்ட் அடிப்பார். டென்ஷன் நேரங்களில் அவருடன் இருந்தால், அந்த ஏரியாவே கலகலப்பாகி விடும்.
 இன்னும் உங்களுக்கு யாரெல்லாம் ப்ரெண்ட்ஸ். சித்தார்த் - சமந்தா கூட சம்திங் சம்திங் ஸ்பெஷலாமே...? சித்தார்த் கூட பேசுவிங்களா...?
 சித்தார்த்துடன் ஒரு படம் நடித்தேன். அன்று முதல் இந்தக் கேள்வி என்னை துரத்தி வந்துக் கொண்டே இருக்கிறது. சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள். குறிப்பாக ஒரு சிலரை சொன்னால் நன்றாக இருக்காது. சித்தார்த்துடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசிக் கொண்டதோடு சரி. அதன் பின் அவரைப் பார்க்கவே இல்லை. சமீபத்தில் ஐதராபாத்தில் ஒரு விழாவில் பார்த்தேன். நார்மலா ஐந்து நிமிஷம் பேசினார். எங்களிடம் நல்ல நட்பு இருக்கிறது. சித்தார்த்துக்கு சாக்லேட் பாய் இமேஜ் இருக்கிறது. அதனால் அவருக்கு ஏகப்பட்ட கேர்ள் ப்ரெண்ட்ஸ் இருக்கலாம்.
 தமிழ் பொண்ணுன்னு சொன்னீங்களே...?
 என் அம்மாவுக்கு மயிலாடுதுறை. பள்ளி படிப்பெல்லாம் சென்னையில்தான். கல்லூரி படிப்புக்காக மட்டும் நியூயார்க் போனேன். மற்றபடி சின்ன வயதில் கும்பகோணம், திருவாரூர் என தமிழ்நாட்டில்தான் சுற்றி வந்திருக்கிறேன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com