பகத்சிங் படித்த புத்தகம்

1931 மார்ச் 23, மாலை நேரம். லாகூர் சிறையில் தனிக்கொட்டடி. சிறையின் தலைமை வார்டன் சர்தார் சிங் சீக்கியர்களின் புனித நூலான ""குத்தா''வை
பகத்சிங் படித்த புத்தகம்
Updated on
1 min read

1931 மார்ச் 23, மாலை நேரம். லாகூர் சிறையில் தனிக்கொட்டடி. சிறையின் தலைமை வார்டன் சர்தார் சிங் சீக்கியர்களின் புனித நூலான ""குத்தா''வை பகத்சிங்கிடம் நீட்டி ""நான் ஒரு சிறை அதிகாரியாக இதைச் சொல்லவில்லை, உன் தந்தையின் ஸ்தானத்திலிருந்து சொல்கிறேன். இறுதிநேரத்தில் இந்த நூலைப் படித்து கடவுளை நினைத்துக்கொள்'' என்கிறார்.
 ""தந்தையின் ஸ்தானத்தில் என்ன? என் தந்தையே நேரில் வந்து கொடுத்தாலும் இதுபோன்ற மதநூல்களைப் படிக்க என் மனம் ஒப்பாது. இதை நான் செய்தால் சராசரி மனிதரைப் போன்றே சாகும்போது நானும் கொள்கையைக் கைவிட்டு கடவுளிடம் சரணடைந்தேன் என்று மக்கள் எண்ணுவார்கள். எனக்கு என் கொள்கையைவிட உயிர் பெரிதல்ல'' என்கிறார்
 பகத்சிங்.
 சிறிது நேரம் சென்றது. சிறை அதிகாரிகள் சிலர் தனிக்கொட்டடிக்கு வருகின்றனர். அப்போது பகத்சிங் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார்.
 ""தூக்குமேடைக்குச் செல்ல உன்னை தயார் செய்ய வேண்டும்'' என்றனர் அதிகாரிகள்.
 ""ஒரு மாவீரனிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். சிறிது நேரம் காத்திருங்கள்'' என்கிறார் பகத்சிங். அப்போது அவர் படித்துக்கொண்டிருந்தது லெனின் எழுதிய "அரசும் புரட்சியும்' என்ற நூலாகும். நூலைப் படித்து முடித்ததும் ""வாருங்கள் போகலாம்'' என்கிறார் பகத்சிங்.
 (கே. ஜீவபாரதி எழுதிய ""மாவீரனின் கடைசி மணித்துளிகள்'' என்ற கட்டுரையிலிருந்து).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com