கை விரல்களில் இருக்கிறது மருத்துவம்!

தலைவலிக்கு நெற்றியில் தைலம் தடவிக்கொண்டு சூடு பறக்கத் தேய்த்தால் தலைவலி போய்விட்டதைப் போல்
கை விரல்களில் இருக்கிறது மருத்துவம்!

தலைவலிக்கு நெற்றியில் தைலம் தடவிக்கொண்டு சூடு பறக்கத் தேய்த்தால் தலைவலி போய்விட்டதைப் போல் தோன்றும். ஆனால் போகாது. இதற்குப் பதிலாக வலது கையின் கட்டைவிரலை மேலிருந்து கீழாக பிடித்தபடி 14 முறை அழுத்தியும் பக்கவாட்டில் 14 முறை அழுத்தியும்விட்டால் படிப்படியாக தலைவலி குறையும். இந்த அழுத்தத்துக்குப் பெயர் அக்குபிரஷர், இந்த வகையான அழுத்தங்களை நமது கைகளிலும் கால்களிலும் உண்டாக்குவதின் மூலம் நாள்பட்ட ஆஸ்துமா, சர்க்கரை நோய், எலும்பு சம்பந்தமான பிரச்னைகள், கல்லீரல் தொடர்பான பிரச்னைகள் அனைத்திற்கும் மருந்தில்லா வைத்தியமாக,பக்க விளைகள் இல்லாத வைத்தியமாக அக்குபிரஷரை செய்யமுடியும் என்கிறார் அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் துறையில் நீண்ட நாள் அனுபவம் பெற்றிருக்கும் டாக்டர் ஜெயலட்சுமி. வலி நிவாரணம் தொடர்பாக 12 நூல்களை எழுதியிருக்கிறார். இதன் சிறப்புகள் குறித்து பல கல்லூரிகளுக்கும் சென்று கருத்தரங்கங்கள் நடத்திவருகிறார். அமெரிக்காவின் கார்நெல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இதுகுறித்து வகுப்புகள் எடுக்கிறார். அவரிடம் நாம் பேசியதிலிருந்து...

""சென்னை, சத்தியமூர்த்தி மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றபின் ஹோமியோபதி மருத்துவத்தில் டிப்ளமோ படித்தேன். எனக்கு ஆஸ்துமா பிரச்னை இருந்தது. நோயாளியான நான் என்னுடைய மருத்துவத் தேவைக்காக அக்குபிரஷரைத் தெரிந்து கொண்டேன். இன்றைக்கு மருத்துவராக பலரின் பிரச்னைகளையும் தீர்த்துவருகிறேன். வீட்டிற்கு ஒரு மருத்துவர் அக்குபிரஷர் தெரிந்து கொண்டால் உருவாகலாம்.

நம் உடலின் உட்புறமாக இயங்கும் சக்திதான் எல்லா உறுப்புக்களையும் இயங்கவைக்கின்றது. இதை சக்தி ஓட்டப்பாதைகள் என்பார்கள். உடல் முழுவதும் இப்படிப்பட்ட சக்தி ஓட்டப்பாதைகள்

12-ம் மனித உடலின் முன்புறமும் பின்புறமுமாக இரண்டும் சேர்த்து 14 சக்தி ஓட்டப் பாதைகளில் சில குறிப்பிட்ட புள்ளிகளில் கொடுக்கப்படும் அழுத்தத்தைக் கொண்டு பல நோய்களை குணப்படுத்தலாம். இதற்கு அடுத்தகட்ட சிகிச்சைமுறைதான் ஒரேயொரு ஊசியைக் கொண்டு அளிக்கப்படும் அக்கு

பஞ்சர் சிகிச்சைமுறை.

உணவு உண்பதற்கு முன்பு அக்குபிரஷர் செய்வது சிறந்தது. தினமும்

இருமுறை இரு உள்ளங்கைகளின் சக்தி ஓட்டப் பாதையின் புள்ளிகளில் முறையாக அழுத்தம் கொடுக்கவேண்டும். வலி உள்ள  புள்ளிகள் ஒவ்வொன்றிலும் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தல் நலம். அழுத்தம் கொடுக்கும்போது மூச்சை உள்ளே இழுத்து, தளர்த்தும்போது மூச்சை வெளியே விட்டு செய்தால் அதிக பலன் கிட்டும். தினமும் அழுத்தம் கொடுத்தால், சில நாட்களில் வலி போய்விடும். வலி மறைந்துவிட்டால் அவ்வுறுப்பு குணமடைந்துவிட்டது என்று பொருள். நாளை வரும் நோய்க்கு இன்றே வலி தெரியும். இன்றே அழுத்தம் கொடுத்தால் நாளை வரும் நோய் வராமல் தடுக்கப்படும். ஆய்வுக்கூடத்தில் செய்யப்படும் பரிசோதனைகள் நோய் வந்த பிறகே நமக்குக் காட்டும். ஆனால் பிரதிபலிப்பு முறையில் நோய் வரும் முன்னரே நம்மை எச்சரிக்கும். வெறும் அழுத்தம் கொடுப்பதாலேயே நோய்கள் வராமல் தடுக்கப்படும்.

நமது கட்டை விரல் தலையைக் குறிக்கும். கட்டைவிரலில் காட்டப்பட்டுள்ள 1, 2, 3, 4 என்ற புள்ளிகள் முறையே மூளை, பிட்யூட்டரி சுரப்பி, பினியல் சுரப்பி, மூளை நரம்புகள் இவற்றைக் குறிக்கும். இந்த நான்கும் மிக முக்கியமான உறுப்புகளாகும். இதை ஒவ்வொரு புள்ளியிலும் 7 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். பின்னர் 4 என்ற புள்ளிக்குக் கீழே ஒரு நேர்கோட்டில் அழுத்தம் கொடுத்து மணிக்கட்டு ரேகை வரை வரவேண்டும்.

பின்னர் ஆட்காட்டி விரல் நுனியில் ஆரம்பித்து நேர் கோட்டில் அழுத்தம் கொடுத்துக் கொண்டே மணிக்கட்டு ரேகைக்குக் கீழே இரு புள்ளிகள் வரை வந்து அதே கோட்டில் திரும்பிச் சென்று விரல் நுனி வரை வரவேண்டும். இவ்வாறு மூன்று முறைகள் செய்ய வேண்டும். பின்னர் நடு விரல், மோதிர விரல், சிறு விரல் நுனிகளிலிருந்தும் நேர் கோட்டில், மணிக்கட்டு ரேகைக்குக் கீழே இரு புள்ளிகள் வரை வந்து திரும்ப விரல் நுனிக்குச் செல்லவேண்டும். இதுபோல் மூன்று முறைகள் செய்யும்போது ஒவ்வொரு புள்ளியிலும் 6 முறைகள் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

இதுபோல் செய்யும்போது உடலின் அனைத்து பிரதிபலிப்புப் புள்ளிகளும் தூண்டப்படுகின்றன. உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இது மிகவும் எளிமையான முறையாகும். அதேசமயம் இதன் பயனோ மிகப் பெரியது. எந்த உறுப்பின் பிரதிபலிப்பு எங்கு உள்ளது என்று அறிந்து கொள்ளத் தேவையில்லை.

ஒவ்வொரு நாளும் காலையில் இந்தப் பயிற்சியைச் செய்யும்போது உடல் நலம் குறைந்தவர்களுக்கு உடல் நலம் கிடைக்கிறது. உடல் நலம் உள்ளவர்களுக்கு உடல் நலம் மேலும் அதிகரிக்கிறது. நோய்கள் தடுக்கப்படுகின்றன'' என்கிறார் ஜெயலட்சுமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com