தமிழகம் 2012

தமிழகம் முக்கிய நிகழ்வுகள் 2012
தமிழகம் 2012
Updated on
4 min read

ஜனவரி

16 :  சேப்பாக்கம் எழிலகத்தில் 200 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தீயை அணைக்கும் முயற்சியில் இருந்த தீயணைப்பு வீரர் பலி.

20 :  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக போலீஸ் முன்னாள் டி.ஜி.பி. ஆர்.நடராஜ் நியமனம்.

23:  தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் நில மோசடிப் புகாரில் கைது.

26:  இஸ்கான் அமைப்பு சார்பில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் 1.5 ஏக்கரில் ரூ. 10 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீராதாகிருஷ்ணன் கோயில் திறந்து வைக்கப்பட்டது.

27:  சசிகலாவின் உறவினரான ராவணன் மோசடிப் புகாரில் கோவை போலீஸ் கைது.

31:  மொபைல் போனில் பேரவை நிகழ்ச்சிகளைப் படமெடுத்ததற்காக முன்னாள் மத்திய அமைச்சர் பாலுவின் மகனான டி.ஆர். ராஜா சட்டப்பேரவையில் இருந்து 10 நாள்களுக்கு சஸ்பெண்ட்.

பிப்ரவரி

1:  வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாகக் கூறி முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவின் வீடுகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸார் சோதனை.

2:  பேரவை எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த், விவாதத்தின்போது அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் கூறி பேரவையிலிருந்து 10 நாள்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

9:  சென்னை பாரிமுனையில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஆர்.உமாமகேஸ்வரி, அதே பள்ளியில் படிக்கும் மாணவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

9:  மதுரை திருமங்கலம் அருகே கிணற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி.

23 :  சென்னையில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வட மாநில இளைஞர்கள் 5 பேர் போலீஸாருடன் நடைபெற்ற என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.

28 :  கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவளித்ததாகக் கூறி ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஹெர்மன் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டார்.

மார்ச்

18 :  அதிமுக அமைச்சர் வி.கருப்பசாமி உயிரிழந்ததால், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

22 :  சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.முத்துச்செல்வி 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

29 :  தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என். ராமஜெயம் திருச்சியில் கொலை செய்யப்பட்டார்.

30 :  9 ஆண்டுகளுக்குப் பிறகு மின் கட்டணத்தை 37 சதவீதம் உயர்த்துவதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.

ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல்

9 :  தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

20 :  சென்னை ராணுவக் குடியிருப்பில் 13-வது சிறுவன் தில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கே. ராமராஜுக்கு விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

29 :  மதுரை ஆதினத்தின் இளைய ஆதினமாக நித்யானந்தர் நியமனம்

26 :  இஸ்கான் அமைப்பு சார்பில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் 1.5 ஏக்கரில் ரூ. 10 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீராதாகிருஷ்ணன் கோயில்திறந்து வைக்கப்பட்டது.

மே

1 :  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஸ்ரீகைலாசநாதர் கோயில் தேர் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலி.

3 :  வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நெல்லூர்பேட்டை கோயில் திருவிழாவில் மின் கம்பத்தில் தேர் மோதிய விபத்தில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி.

5 :  மதுரை ஆதினத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

10:  மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

10:  மதுரையில் நடைபெற்ற பாஜக மாநில மாநாட்டில் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்.

15 :  சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய இடங்களுக்கு யாத்திரை செல்ல ஹிந்து பக்தர்கள் 500 பேருக்கு மானியம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.

17:  திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 16 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை.

ஜூன்

4 :  சேலத்தில் குடிசைகளுக்கு தீ வைத்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டார்.

4 :  முன்னாள் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி நிலப் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

15 :  2004-ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 64 பேர் உயிரிழந்தனர். இது குறித்த வழக்கில் 4 பேருக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜூலை

4 :  அதிமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுக நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த 85 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

6 :  சென்னை தாம்பரத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவந்த இலங்கை ராணுவத்தை சேர்ந்த 27 வீரர்கள் கர்நாடக மாநிலத்துக்கு அனுப்பப்பட்டனர்.

18 :  தமிழக வருவாய் துறை அமைச்சர் மற்றும் அதிமுக கட்சி பொறுப்பிலிருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.

19 :  பல்கலைக்கழக துணை வேந்தர்களின் ஓய்வுபெறும் வயதை 65-ல் இருந்து 70-ஆக உயர்த்தி தமிழ அரசு உத்தரவிட்டது.

23:  முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.

ஆகஸ்ட்

3 :  பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித் தொகையை கையாடல் செய்ததற்காக 77 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

6 :  சென்னை அருகில் தனியார் பொறியியல் கல்லூரியின் விளையாட்டு அரங்கம் கட்டும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

6 :  எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஓய்வுபெற்றார்.

9 :  தனியார் பொறியியல் கல்லூரி கட்டுமான விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் தொடர்பாக அக்கல்லூரியின் தலைவர் ஜேப்பியார் கைது செய்யப்பட்டார்.

9 :  கிரானைட் முறைகேடு தொடர்பாக மேலூர் பி.ஆர்.பி கிரானைட்ஸ் நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

12 :  சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது உள்பட 14 தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டன.

13 :  வினாத்தாள் வெளியான விவகாரத்தில் குரூப் - 2 தேர்வு ரத்து.

செப்டம்பர்

5 :  நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய முதலிப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 38 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர்.

10 :  கூடங்குளம் அணுஉலையை முற்றுகையிடும் போராட்டத்தின் போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் பலியானார்.

13 :  கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்பத் தடை விதிக்கக் கோரி 100-க்கும் மேற்பட்டவர்கள் இடிந்தகரை கடலுக்குள் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.

17 :  இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தைச் சேர்ந்த விஜய்ராஜ் என்ற இளைஞர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

29 :  தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பதவியிலிருந்து டி.ஜெயகுமார் ராஜினாமா செய்தார்.

அக்டோபர்

3 :  சட்டம், வணிக வரித் துறை மற்றும் பதிவுத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. பி. மோகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

5:  பள்ளிகள் சார்பில் இயக்கப்படும் பஸ்களில் 12 வயதுக்கு உட்பட்ட பள்ளி குழந்தைகளை மட்டுமே ஏற்ற வேண்டும். மொத்த இருக்கைகளின் எண்ணிக்கையில் 1.5 சதவீத அளவில் மட்டுமே குழந்தைகள் பஸ்களில் ஏற்ற வேண்டம். -ஏர்- ஹாரன்களை வைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அடங்கிய புதிய பர்மிட் கட்டுப்பாடுகள் அரசிதழில் சிறப்பு விதியாக அறிமுகம் செய்யப்பட்டது.

19 :  மதுரை ஆதின மடத்தின் இளைய ஆதினம் நித்யானந்தர் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

நவம்பர்

1 :  பள்ளி குழந்தைகள் முஸ்கான், ஹிரித்திக் ஜெயின் ஆகியோரை கடத்தி கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் உயிருடன் இருந்த ஆர். மனோகரனுக்கு கோவை நீதிமன்றம் இரட்டை மரண தண்டனையும், 3 ஆயுள் தண்டனைகளையும் விதித்து உத்தரவிட்டது.

9:  மெரீனாவில் புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

29:  உச்ச நீதிமன்ற அறிவுரையின் பேரில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கர்நாடக முதல்வரை பெங்களூரில் சந்தித்துப் பேசினார்.

அப்போது தமிழகம் கோரிய 39 டிஎம்சி தண்ணீரை தர இயலாது என கர்நாடக முதல்வர் ஷெட்டர் தெரிவித்தார்.

24 :  வால்பாறையிலிருந்து பழனிக்கு அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பஸ், 200 அடி பள்ளத்தில் விழுந்ததில் 7 பேர் பலி.

டிசம்பர்

4 :  மதிமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத் அக்கட்சியிலிருந்து விலகி முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

10 :  சென்னை மாநகர பஸ்ஸில் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் லாரி மோதி பலி.

20:  கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ-யின் கணவர் மகாதேவன் சென்னையில் தற்கொலை.

திருமணம்

மே 11: நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா திருமணம்.

மே 16: நடிகை உதயதாரா - தொழிலதிபர் ஜூபின் சோசப் திருமணம்.

ஜூன் 15: நடிகை சாயாசிங் - நடிகர் கிருஷ்ணா திருமணம்

தற்கொலை

நவம்பர் 1:   மன அழுத்தம் காரணமாக நடிகை விஜயலெட்சுமி தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

உதவி

ஜனவரி 27:  "தானே' புயல் நிவாரண உதவியாக முதல்வர் ஜெயலலிதாவிடம்  நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 லட்சம் வழங்கினார்.

மறைவு

ஜனவரி 30:  நடிகர் "இடிச்சப்புளி' செல்வராஜ் காலமானார். வயது 73.

பிப்ரவரி 20:  நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார். வயது 85.

ஏப்ரல் 2:  நடிகை எம்.சரோஜா காலமானார். வயது 79.

மே 26:  நடிகர் திலீப் காலமானார். வயது 52.

ஜூன் 14:  பழம் பெரும் நடிகர் "காக்கா' ராதாகிருஷ்ணன் 86-ம் வயதில் காலமானார்.

ஜூன் 19:  தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. காலமானார்.

ஆகஸ்ட் 7:  நடிகர் என்னத்த கண்ணையா காலமானார். வயது 87.

செப்டம்பர் 16:  நடிகர் "லூஸ்' மோகன் காலமானார். வயது 84.

செப்டம்பர் 18:  நடிகர் பெரிய கருப்பு தேவர் காலமானார். 78.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com