சினி மினி

சற்குணம் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு "சொட்டவாளக்குடி' எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
சினி மினி
Updated on
2 min read

சற்குணம் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு "சொட்டவாளக்குடி' எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. தற்போது அந்தப் பெயரை "நய்யாண்டி' என மாற்றியுள்ளனர். "பொல்லாதவன்', "ஆடுகளம்' ஆகிய படங்களை தயாரித்த எஸ்.கதிரேசன் இப்படத்தை தயாரிக்கிறார். சூரி, சத்யன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள். கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது. "வாகை சூட வா' படத்துக்கு இசையமைத்த ஜிப்ரான் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கலை - விஜய்முருகன், படத்தொகுப்பு - ராஜாமுகமது. குத்து விளக்கு தொழில் செய்யும் ஹீரோவிற்கும், பல் டாக்டருக்கு படித்துக் கொண்டிருக்கும் ஹீரோயினுக்கும் இடையேயான காதலை காமெடியாக சொல்லுவதுதான் கதை. பிப்ரவரியில் ஷூட்டிங் தொடங்குகிறது.

சல்மான்ருஷ்டி எழுதிய புத்தகம் ஆங்கிலத்தில் "மிட் நைட் சில்ரன்' என்ற பெயரில் படமாகி வருகிறது. ஸ்ரேயா முக்கிய வேடம் ஏற்க இப்படத்தை இயக்குகிறார் தீபா மேத்தா. இப்படத்துக்காக குடிசை பகுதியில் வாழும் பெண் வேடம் ஏற்கிறார் ஸ்ரேயா. இந்த பாத்திரத்தின் தன்மையை புரிந்துக் கொள்வதற்காக குடிசை பகுதிக்கு சென்று 2 மாதங்கள் தங்கி வேலை செய்திருக்கிறார் ஸ்ரேயா. ""1947-ம் ஆண்டில் அபூர்வ சக்திகளுடன் பிறக்கும் குழந்தையை மையமாக வைத்து நடக்கும் சம்பவங்களை பிரதிபலிக்கும் கதையாக இது உருவாகிறது. ஒட்டுமொத்த புத்தக கதையையும் 2 மணி நேர சினிமாவில் காட்டுவது சவாலான விஷயம். ஒவ்வொரு பாத்திரமும் கதை சொல்லும், அதனால் அவற்றை தொகுப்பது சவாலாக இருந்தது. சினிமாவிற்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டது. இதை சல்மான் அனுமதித்தார். குடிசை பெண்களின் வாழ்வியல் முறை ரொம்பவே சுவாரஸ்யமானது. அதை 2 மாதங்கள் நல்ல முறையில் அனுபவித்து வாழ்ந்தேன். அந்த வாழ்க்கையை நீங்கள் நிச்சயம் படத்தில் பார்க்கலாம்'' என தன் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார் ஸ்ரேயா.

உடல் ஊனமுற்றவர்களை, சக மனிதர்களை வைத்து கிண்டல் செய்யும் காமெடிகளில் எனக்கு உடன்பாடில்லை என தெரிவித்துள்ளார் நடிகர் சத்யன். பி.டி.செல்வகுமார் இயக்கும் "ஒன்பதுல குரு' படத்தின் மூலம் 50 படங்களை நிறைவு செய்திருக்கிறேன். 1987-ல் வெளியான "சின்னத்தம்பி பெரிய தம்பி' படத்தில்தான் அறிமுகம் ஆனேன். "இளையவன்' உள்ளிட்ட இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்தேன். சரியான வரவேற்பு இல்லாமல்தான் நகைச்சுவை நடிகனாக மாறினேன். இந்த இடமே திருப்தி அளிக்கிறது. முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாகும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. "நண்பன்' மற்றும் "துப்பாக்கி' படங்கள் என் 50 படங்களில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. சக மனிதனை கிண்டல் செய்து காமெடி செய்யும் வழக்கம் தமிழ் சினிமாவில் அதிகரித்திருக்கிறது. அது மாதிரியான காமெடிகளில் எனக்கு உடன்பாடில்லை'' என்றார் சத்யன்.

"முனி' படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் "காஞ்சனா'. தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிறது. லாரன்ஸ் இயக்கி நடிக்கிறார். லாரன்ஸþடன் "இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்', "காஞ்சனா' ஆகிய படங்களில் நடித்த லட்சுமிராய் இந்தப் படத்திலும் நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த வேடத்தில் டாப்ஸி நடித்து வருகிறார். ""முனி' படத்தின் மூன்றாம் பாகத்தில் நடிப்பதற்கு எனக்குதான் முதலில் தெரிவிக்கப்பட்டது. வேறு ஒரு நடிகை இதில் நடிக்க வேண்டியது குறித்து என்னிடம் கேட்கிறார்கள். லாரன்ஸ் என்னிடம் கதை சொன்னார். பிடித்திருந்தது. அதனால் நடித்தேன். யாருடைய வாய்ப்பையும் தட்டி பறிக்கவில்லை.  பேய் கதைகளில் நடிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதனால் மிகுந்த துணிச்சலுடன் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன். ஈ.சி.ஆர். சாலையில் உள்ள பங்களாவில் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஆர்வமாக ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறேன். நிச்சயம் வேறுபட்ட கதாபாத்திரத்தில் என்னை இதில் பார்க்கலாம்'' என்கிறார் டாப்ஸி.

"கும்கி' பட பாடல்கள் மூலம் பரவலான பாராட்டுகளை பெற்றுள்ள இசையமைப்பாளர் டி.இமான், இனி குத்துப் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறார். கிராமிய மற்றும் மெல்லிசை பாடல்களுக்கு மட்டுமே ஆயுள் அதிகம். அதில் மட்டுமே அதிக கவனம் எடுத்துக் கொள்ள போவதாகவும் கூறியுள்ளார்.  "மைனா' மற்றும் "கும்கி' படத்தின் பாடல்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும், ரசிகர்களின் மனதில் நிற்கும். அந்த அளவுக்கு அதில் ஜீவன் இருக்கிறது. வரிகளுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை கொடுத்து அப்பாடல்களை உருவாக்கி இருக்கிறேன்'' என்கிற இமான். இதுவரை எந்த வெளிநாட்டுக்கும் சென்று பாடல்களை உருவாக்கியதில்லையாம். கிழக்கு கடற்கரை சாலையில் டியூன்களை உருவாக்குவது பிடிக்கும் என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com