

• வீட்டு வேலை செய்யும் சிறிய ரோபோ என்னும் இயந்திர மனிதனின் உயரம் மூன்றடி. எடை - இருபத்தி இரண்டரை கிலோ ஆகும்.
• போலீஸ் ரோபோ என்ற ஒன்று உண்டு. அதன் எடை 87 கிலோ. உயரம் ஒன்றரை மீட்டர். பெயர் ஞடஈ-2.
• மனிதனுக்கு உள்ள அத்தனை உறுப்புக்களையும் கொண்ட ரோபோவுக்கு "லெனின் கிரேடு' என்று பெயர். இது ரோபோ இயல் மற்றும் பொறியியல் சைபர்னடிக்ஸ் கழகத்தில் உள்ளது.
• அயர்லாந்து அருகே அட்லாண்டிக் கடலில் ஏர்இந்தியா ஜெட் விமானம் வெடித்துச் சிதறியபோது கடலில் மூழ்கிய பொருள்களைக் கண்டெடுத்த ரோபோவின் பெயர் "ஸ்கார்ப்'.
• ரோபோவின் மூளை போலார், சிலிண்டர் என்ற இரண்டுவித அமைப்பில் உள்ளன.
• முதல் இயந்திர மனிதன் கலிபோர்னியாவிலுள்ள ஸ்டாண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1968-இல் பிறந்தான்.
• முதல் தலைமுறை ரோபோவினால் பார்த்து, தொட்டு உணரமுடியாது.
• வியட்நாம் யுத்தத்தின் போது ரயில் பாதையில் நாச வேலைகள் உள்ளனவா என்று கண்டுபிடிக்க ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன.
• எந்திர மனிதனின் தற்போதைய விலை 60 ஆயிரம் டாலர்.
• ரோபோ இயல் வல்லுநர் பேக்கலின் காஃப் எதிர்கால ரோபோக்கள் தபால் தலைகளை நாவினால் தட்டும். சூடான தோசையை எடுக்கும் எனக் கண்டுபிடித்துள்ளார்.
ஆதாரம்: நவீன அறிவியல் கருவூலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.