இதன் முக்கிய நோக்கம் யாருக்கு ரத்தம் தேவையோ,அவர் இருக்கும் இடத்திலேயே, அவரவர் பகுதிகளிலேயே ரத்தம் தரக்கூடிய தன்னார்வ ரத்தக் கொடையாளரை இந்த இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். எந்த வகை ரத்தக் கொடையாளர் தேவை என்பதை அறிந்து,அவரை இணையத்தில் உள்ள செல்பேசி மூலமாக அழைத்து ரத்தம் பெற்றுக் கொள்ள இந்த இணையம் பேருதவியாக இருந்து வருகிறது. எவ்வித இடைத்தரகரும் இல்லாமல்,கட்டணமும் எதுவும் இல்லாமல் தன்னார்வ ரத்தக் கொடையாளர் ரத்தம் தேவைப்படும் இடத்துக்கு அவரே நேரில் வந்து வழங்கிவிட்டுச் சென்று விடுவார். இந்த இணையதளத்தின் பெயர் ஜ்ஜ்ஜ்.ச்ழ்ண்ங்ய்க்ள்ற்ர்ள்ன்ல்ல்ர்ழ்ற்.ர்ழ்ஞ் என்பதாகும். இந்த இணையதளத்தில் இந்தியா முழுவதும் எந்த நேரமும் தன்னார்வத்துடன் ரத்தம் தர தயாராக இருக்கிறோம் என சுமார் 1.50 லட்சம் பேர் வரை தங்களது பெயரை தாமாகவே முன்வந்து பதிவு செய்திருக்கிறார்கள். சாதி, மதம், உயர்வு, தாழ்வு, ஏழை, பணக்காரன் என்கிற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைத்து மக்களின் ரத்த தேவையையும் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது இந்த இணையதளம். இந்த இணையதளத்தில் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளராகவும் ராமநாதபுரம் அரிமா சங்க செயலாளராகவும் இருந்து வரும் ஏ.வி.சதீஷ்குமாரை அவரது அலுவலகத்தில் ஒரு மாலை வேளையில் சந்தித்துப் பேசினோம்: