ரோஜாப்பூ மருத்துவம்

ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கப்படும் பன்னீர் கண்களில் உள்ள எரிச்சல் தன்மையை நீக்கும்.
ரோஜாப்பூ மருத்துவம்
Updated on
1 min read

  ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கப்படும் பன்னீர் கண்களில் உள்ள எரிச்சல் தன்மையை நீக்கும்.
  ரோஜா இதழ், இஞ்சி, புளி, பச்சைமிளகாய், தேங்காய் இவற்றைச் சேர்த்து அரைத்து சட்னி செய்து சாப்பிட உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகி செரிமானமும் எளிதாகும்.
  ரோஜா இதழ்களை வெற்றிலைப்பாக்குடன் சேர்த்துச் சாப்பிட வாய் துர்நாற்றம் நீங்கும்.
  சுக்கு - மல்லி காபியுடன் ரோஜா இதழ்களைச் சேர்த்து அருந்த அஜீரணம் அகலும். தலைசுற்றல், மயக்கம், இதயம் தொடர்பான கோளாறுகள் நீங்கும்.
  ரோஜா இதழ் குல்கந்து உடலுக்கு வலிமை, குளிர்ச்சி அளிக்கும்.
  ரோஜாப்பூ கஷாயத்தில் பசும்பால், சர்க்கரை சேர்த்துப் பருகி வந்தால் பித்தநீர் மிகுதியால் ஏற்படும் மயக்கம், வாய்க்கசப்பு, நெஞ்சு எரிச்சல் நீங்கிவிடும்.
  ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு காலை, மாலை வாயிலிட்டு மென்று சாப்பிட வயிற்றுக்கடுப்பு, சீதபேதி குணமாகும். வாய்ப்புண், குடல்புண் ஆறும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கு நீங்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறுநீர் எளிதாகப் பிரியும்.
  ரோஜாப்பூ இதழ்களுடன் துவரம்பருப்பு கலந்து கூட்டு செய்து உண்டுவர உடல் உஷ்ணம் சம நிலைப்படும். உடல் பலத்தையும் சுறுசுறுப்பையும் கொடுக்கும். மூளைக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com