பல் தேய்க்கும் குச்சிகளும்  அதன் பயன்களும்

நமக்குத் தெரிந்த ஆலங்குச்சி மற்றும் வேலங்குச்சி மட்டுமல்லாமல்.
பல் தேய்க்கும் குச்சிகளும்  அதன் பயன்களும்
Updated on
1 min read

நமக்குத் தெரிந்த ஆலங்குச்சி மற்றும் வேலங்குச்சி மட்டுமல்லாமல்... பல்வேறு மூலிகைக் குச்சிகளைக் கொண்டும் பல் துலக்கலாம். எந்தெந்தக் குச்சிகளைக் கொண்டு பல்துலக்கினால் என்னென்ன நன்மைகள் விளையும்?
 எருக்கு, நாயுருவி, கருங்காலி, புங்கு, சம்பகம், ஆலங்குச்சி, மருது, புரசு, இத்தி, மல்லி, நரிமா, நாவல், மா, அசோகம், அத்தி, வேம்பு, அரசு,கருவேல், ஸரள தேவதாரு,குங்கிலியமரம், மாதுளை, அடைப்பை, அரளி, வாகை, அழிஞ்சில், வேங்கை, இலுப்பை, மூவிலை, இலந்தை, ஆடாதொடை இவற்றைக் கொண்டு பல் துலக்கி ஈறுகளையும், பற்களையும் பாதுகாக்கலாம்.
 எருக்கு - பல்வலி அகற்றும்.
 நாயுருவி - பற்களை நன்கு வளரச் செய்யும்.
 கருங்காலி - பல் வியாதிகளை அகற்றும்.
 புங்கு, சம்பகம் - வாய் நாற்றம் அகற்றும்.
 ஆலங்குச்சி - வாய்ப்புண்களை அகற்றி பற்களைக் கெட்டிப்படுத்தும்.
 மருது - பற்களைச் சுத்தம் செய்யும்.
 புரசு - வாயைச் சுத்தம் செய்யும்.
 வேம்பு - ருசியளிக்கும்.
 அரசு - பல் கூச்சம் நீக்கும்.
 கருவேல் - பற்களை பளிச்சென்று ஆக்கும்.
 ஸரள தேவதாரு - பற்களைக் கெட்டிப்படுத்தும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com