

திருக்குறளை எழுதிய திருவள்ளுவர், அதனை ஓலைச்சுவடியில் எழுதினார் என பாடங்களில் படித்ததுண்டு. தற்போதைய இளைஞர்களுக்கு ஓலைச்சுவடி என்றால் என்னவென்று
தெரியாது.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.ஜோசப் 1330 திருக்குறளையும் ஓலைச்சுவடியில் எழுதியுள்ளார். எப்படி எழுதினாராம்?
""குருத்து ஓலையில் தேவையான அளவு வெட்டி, மஞ்சள் தடவி, அதனை வேகவைத்து, பின்னர் அதனை நிழலில் உலர்த்தி, அதில் ஆணியால் எழுத வேண்டும்.
அப்படி எழுதிய பின்னர் அதில் கரிதூசியை பூசி தட்டிவிட்டுவிட்டால் எழுத்துக்கள் பளிச்சென தெரியும். ஒரு திருக்குறளை எழுத 30 நிமிடம் ஆனது'' என்றார் ஜோசப்.
- எஸ்.பாலசுந்தரராஜ், சிவகாசி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.