தமிழால் சிறப்புப் பெற்ற மாணவி!

"சிறப்பது என்றால் தமிழால் சிறக்க வேண்டும்' என்று கவி பாடிய புரட்சிக் கவி பாரதிதாசனின் 125ஆவது பிறந்த நாள் ஆண்டில், அவரது சொல்லுக்கேற்ப தமிழால் சிறப்புப் பெற்றவராகத் திகழ்கிறார் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த ஜனார்த்தனன்-ஜெயா தம்பதியின் மகள் செய்லா.
தமிழால் சிறப்புப் பெற்ற மாணவி!

"சிறப்பது என்றால் தமிழால் சிறக்க வேண்டும்' என்று கவி பாடிய புரட்சிக் கவி பாரதிதாசனின் 125ஆவது பிறந்த நாள் ஆண்டில், அவரது சொல்லுக்கேற்ப தமிழால் சிறப்புப் பெற்றவராகத் திகழ்கிறார் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த ஜனார்த்தனன்-ஜெயா தம்பதியின் மகள் செய்லா. இந்த இளம் வயதில் தமிழில் அவருக்கு இருந்த திறமையைக் கண்டு வியந்த அவரது தாயார் ஜெயா ஜனார்த்தனன். மேலும் அவரது திறமையை வளர்க்கும் விதத்தில் திருக்குறள், திருப்பாவை, பாரதியார் பாடல்களை மேலும் கற்பித்திருக்கிறார். மகள் செய்லா குறித்து, அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""கோவில்பட்டி கே.ஆர்.ஏ. வித்யாஷ்ரம் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வருகிறாள் செய்லா. படிப்பது ஆங்கிலவழிக் கல்வி என்றாலும், தமிழ் மீது மிகுந்த ஆர்வமாக இருந்தாள். அவளின் திறமையை வளர்க்கும் விதத்தில் நிறைய தமிழ்ப் பாடல்களில் பயிற்சி அளிக்கத் தொடங்கினோம்.

முதன்முதலாக 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி பாரதியாரின் நினைவு தினத்தன்று எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணிமண்டபத்துக்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த பாரதி அன்பர் ஆர்.ராம்மோகன் பாரதியாரைப் பற்றி ஏதேனும் கவிதை தெரியுமா? என செய்லாவிடம் கேட்க, உடனடியாக பாரதியார் சுயசரிதை என்ற தலைப்பில் கவிதையைத் தெளிவாக அழகாகக் கூறினாள். இதைக் கேட்டு மகிழ்ந்த அவர், செய்லாவை வாழ்த்தினார். பின்னர், சிறிது நாள்கள் கழித்து செய்லாவுக்கு ஒரு புத்தகத்தையும் பரிசாக அனுப்பிவைத்தார்.

இந்தப் பாராட்டும் அங்கீகாரமும் அவளைத் தமிழ் மொழியின் மீது மேலும் ஆர்வம் கொள்ளச் செய்தது. தொடர்ந்து, மகாகவி பாரதியாரின் பாடல்கள் பலவற்றையும் மனப்பாடம் செய்து மேடைகளில் பாடியும், வீர உரை ஆற்றியும் வருகிறாள்.

தமிழ் இலக்கிய விழாக்களில் பாரதியின் தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை இனிமையோடு இசைபடப் பாடி தொடங்கி வைக்கும் சூழல் உருவாயிற்று.

நெல் கட்டும் செவலில் நடந்த மாவீரன் பூலித்தேவன் விழாவில், "சத்திரபதி சிவாஜி தன்னுடைய சைனியத்திற்கு கூறியது' என்ற தலைப்பில் பாரதியார் எழுதிய வீரரசம் ததும்பும் கவிதையைப் பாடி, இதுபோலத்தான் மாவீரன் பூலித்தேவனும் தன் படை வீரர்களுக்குச் சொல்லியிருப்பார் என்று கூறி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தாள்.

விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தன்னுடைய இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு இதுபோன்றதோர் தேசபக்தி ஊட்டும் வீர உரையாற்றினார் என்று சொல்லி, நீண்ட கவிதையைத் தெளிவான உச்சரிப்போடும், அழகோடும் பேசி அங்கு கூடியிருந்த அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டாள்'' என்றார் செய்லாவின் தாயார் ஜெயா.

மேலும் செய்லா, கோதை ஆண்டாள் சொன்ன திருப்பாவை முப்பதும் தப்பாமல் சொல்லித் தமிழின்பம் ஊட்டுகிறார். சங்கத் தமிழ் இலக்கியமான குறிஞ்சிப் பாட்டில் கபிலர் காட்டும் 99 பூக்களையும் பாட்டில் உள்ளது போலவே வரிசையாகச் சொல்லி தமிழை வாழ்த்துவதோடு 99 பூக்களையும் வண்ணப் படமாக்கி வழங்கி வருகிறார். அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல் தமிழ் வேதம் திருக்குறள் 1330

முழுவதையும் மனப்பாடமாக தன் மனதில் ஆபரணம் போல் அணிந்து கொண்டுள்ளார்.

இவர் 2011 முதல் ஒவ்வொரு ஆண்டும் எட்டயபுரத்தில் டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறும் பாரதியார் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கவிதாஞ்சலி படைத்து வருகிறார். மேலும், கோவில்பட்டி, தென்காசி, திற்பரப்பு, சாத்தூர் உள்ளிட்ட ஊர்களில் நடைபெறும் தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு, திருக்குறள் மற்றும் பாரதியாரின் கவிதைகளைப் படைத்து வருகிறார்.

கடந்த மே 1இல் திருச்சியில் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை நடத்திய மாநில அளவிலான திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் கலந்துகொண்டு திருக்குறளை ஒப்பித்தார். திருக்குறள் முழுவதும் செப்பும் திருக்குறள் வாணி செய்லாவை "வாழிய நீ, தமிழ்த்தாய்க்கு வரும் பெருமை உன் பெருமை' எனும் பாரதிதாசன் வார்த்தைகளால் வாழ்த்தி விடைபெற்றோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com