
மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப் போக்கைக் கட்டுப்படுத்த:
3 கிராம் மாம்பருப்பைப் பாலில் அரைத்துச் சாப்பிட அதிக உதிரப்போக்கு நீங்கும்.
3 கிராம் நாவல் கொட்டையைப் பாலில் அரைத்துச் சாப்பிட உதிரப்போக்குக் கட்டுப்படும்.
மாதுளம் பழத்தோலை 5 கிராம் அளவில் அரைத்துப் புளிப்பு மோரில் கலந்து சாப்பிடலாம்.
கொய்யாத் துளிர் இலை 1, மாதுளம் துளிர் இலை -1, மாந்துளிர் இலை -1 இம்மூன்றையும் ஒன்றாக அரைத்துப் புளிப்பு மோரில் கலந்து சாப்பிட்டு வரலாம்.
மாம்பூ, மாதுளம் பூ, வாழைப் பூ மூன்றையும் சம அளவு எடுத்துச் சிறிது உப்பு,புளி,மிளகாய், பூண்டு, இஞ்சி,பெருங் காயம் சேர்த்து அரைத்து, உணவுடன் சாப்பிடலாம்.
மாதவிடாய் நாளில் வாழைப் பூ, பச்சை சுண்டைக்காய், வெண்டைக்காய் ஆகியவற்றைக் காரமில்லாமல் சமைத்து உண்டு வர அதிக உதிரப்போக்கு நிற்கும். பெண்களின் வெள்ளைப் படுதல் நோய்க்கும் இந்த உணவு முறைகள் பொருந்தும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.