
""பூமியில் வளரும் பல தாவரங்கள் மூலிகைகளாகப் பயன்படுவதைப் போன்று கடல் தாவரங்களான பாசிகளும் மருந்தாகப் பயன்படுகின்றன.
கிரேசிலேரியா, அசிரோசா போன்ற பாசிகளிலிருந்து "அகார் அகார்' என்னும் பொருள் கிடைக்கிறது. இது ரொட்டி, பாலாடைக்கட்டி முதலியவற்றைப் பதப்படுத்தவும், இறைச்சி, மீன் முதலியவற்றை டின்களில் அடைத்துப் பதப்படுத்தவும் பயன்படுகிறது.
ஹிப்னியா, கோண்ட்ரஸ் முதலிய சிவப்புப் பாசிகளிலிருந்து "கராகினன்' என்னும் பொருள் கிடைக்கிறது. இந்தப் பொருள், சாக்லெட், பால், ஐஸ்கிரீம் முதலியவை கெட்டுப்போகாமல் வைத்திருக்கப் பயன்படுகிறது.
ஃப்யூக்கஸ் என்னும் கடல்பாசி, கழுத்து வீக்க நோய் வராமல் தடுக்கிறது. இந்தப் பாசியை அதிகமாக உட்கொண்டுவரும் ஜப்பானியர்களுக்குக் கழுத்து வீக்க நோய் வருவதில்லை.
ஜப்பானிலும் அமெரிக்காவிலும் கடல்பாசிகளை வளர்த்துப் பயன்படுத்துகிறார்கள். "கிரேசிலேரியா' என்னும் கடல்பாசியிலிருந்து கஞ்சி தயாரித்து உண்கின்றனர்.
"காலர்பா' என்னும் கடல்பாசியில் உள்ள பொருள்கள் மயக்க மருந்தாகப் பயன்படுகின்றன.
"கிப்னியா நிடிபிகா' என்னும் கடல்பாசி பலவகையான வயிற்றுத் தொல்லைகளுக்கும் தலைவலிக்கும் மருந்தாகின்றன. "துர்வில்லியா' என்னும் கடல்பாசி, தோல் நோயைக் குணப்படுத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.