

* வேலூர் கோட்டை 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது விஜய நகர பேரரசின் ஆட்சிக் காலத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திம்மிரெட்டி, பொம்மி ரெட்டி சகோதரர்களால் 136 ஏக்கர் பரப்பளவில் இக்கோட்டை கட்டப்பட்டது.
* கருங்கல்லால் கட்டப்பட்ட அழகிய கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது இதன் அழகிய மதில்கள். சுற்றியுள்ள அகழியும் உறுதியான கல் கட்டமைப்புக்குப் பெயர் பெற்றது.
* 191 அடி அகலமும் 29 அடி ஆழமும்கொண்ட அகழியோடு கூடிய கோட்டையின் நுழைவு வாயில் கிழக்குப் பக்கம் உள்ளது. இதில் வெளி மதில்சுவர் உள் மதில்சுவர் என 2 சுற்றுச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆற்காடு நவாப் கட்டுப்பாட்டில் இக்கோட்டை வந்தது. முகமதியர்களின் ஆட்சிக்குப் பின்னர் இக்கோட்டை ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.
* கோட்டையில் திப்புமஹால் ,ஹைதர் மஹால், பாஷா மஹால், பேகம் மஹால், கண்டி மஹால் என 5 சிறிய அரண்மனைகள் உள்ளன.
* இக்கோட்டை நாயகர்களிடம் இருந்து பீஜப்பூர் சுல்தானுக்கும் பின்னர் மராட்டியருக்கும் தொடர்ந்து நவாப்புகளுக்கும், இறுதியாக ஆங்கிலேயர்களுக்கும் கைமாறியது. திப்பு சுல்தான் குடும்பத்தினர் இக்கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
* இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் சிப்பாய் புரட்சி 1806-இல் வேலூர் கோட்டையில்தான் நடைபெற்றது.
* இலங்கையிலுள்ள கண்டியை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்கிரம ராஜசிங்கன் ஆங்கிலேயரால் 1815-இல் தோற்கடிக்கப்பட்டார். அப்போது அவரையும் அவரது குடும்பத்தாரையும் வேலூர் கோட்டையில் சிறைவைத்தனர்.
* வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே முத்துமண்டபம் பகுதியில் விக்கிரம ராஜ சிங்கனின் நினைவிடம் உள்ளது.
* வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம் 1985-இல் திறந்து வைக்கப்பட்டது. இதனுள் தொல்லியல் கலைப்பொருட்கள், சிற்பங்கள், நாணயங்கள், கைவினைப் பொருட்கள், ஆயுதங்கள் முதலியவை உள்ளன.
* இந்த கோட்டைக்குள் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்து மதத்திற்குரிய ஜலகண்டேஸ்வரர் கோயில், கிறித்துவ தேவாலயம், முஸ்லிம்களின் வழிபாட்டுக்கு மசூதி ஆகியவை உள்ளன. ஆங்கிலேயர்களின் ஆட்சியில் 1846-இல் கோட்டையில் கிறித்துவ தேவாலயம் கட்டப்பட்டது.
* கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தெற்கு நோக்கி ஏழுநிலை கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. கோயிலின் வலது புறத்தில் குளமும், இடது புறத்தில் மண்டபமும் உள்ளது. கோயிலில் உள்ள தூண்களில் கண்ணைக் கவரும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
* கோட்டையின் வெளிப்புறம் கோட்டை மைதானம் உள்ளது இதில் பல அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசியுள்ளனர். கோட்டையில் உள்ள பூங்காவில் நாள்தோறும் ஆயிரக்கணக்காண மக்கள் பொழுது போக்க பயன் படுகிறது.
* பழமை மாறாமல் உள்ள இக்கோட்டை சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர். வரவாற்று சிறப்பு மிக்க வேலூர் மாநகரின் பெருமைக்கு வேலூர் கோட்டையே சாட்சியாகும்.
* இக்கோட்டை தற்போது தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோட்டையில் பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது காவலர் பயிற்சி பள்ளி, அருங்காட்சியகம் போன்றவைகள் செயல்பட்டு வருகின்றன.
- ஜே.புகழேந்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.