ஐந்து பேர் ஐந்து செய்தி

"நடிகையர் திலகம்' என்று குறிப்பிடப்படுபவர் நடிகை சாவித்திரி. இவரது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இவருக்கு முழு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
ஐந்து பேர் ஐந்து செய்தி
Updated on
1 min read

* எழுத்தாளர் "கல்கி'யின் "தியாகபூமி' கதையைத் திரைப்படமாக எடுத்தவர் இயக்குநர் கே. சுப்பிரமணியம். இப்படத்தின் கதை "ஆனந்த விகடன்' பத்திரிகையில் வெளிவந்துகொண்டிருந்தபோதே படமாகவும் தயாரிக்கப்பட்டது. கதைக்கான படங்களாக திரைப்படக் காட்சியின் புகைப்படங்களே பயன்படுத்தப்பட்டன.

* "நாமக்கல் கவிஞர்' ராமலிங்கம் பிள்ளை ஆரம்ப நாட்களில் மேடை நாடகங்களுக்குப் பாடல் எழுதிவந்தார். எஸ்.ஜி. கிட்டப்பாவின் ராமாயண நாடகத்திற்கு இவர் எழுதிய "தம்மரசைப் பிறராள விட்டுவிட்டு' என்கிற பாடலை பாரதியார் கேட்டுவிட்டு ராமலிங்கம் பிள்ளையை "சபாஷ் பாண்டியா' என்று பாராட்டியிருக்கிறார்.

* "நடிகையர் திலகம்' என்று குறிப்பிடப்படுபவர் நடிகை சாவித்திரி. இவரது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இவருக்கு முழு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒரு நடிகைக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது என்றால் அது சாவித்திரிக்கு மட்டுமே.

* இலக்கிய விமரிசகர் தி.க.சி. வங்கி ஊழியராக பணியாற்றியவர். இவரது தொழிற்சங்க செயல்பாடுகளை விரும்பாத வங்கி நிர்வாகம் இவரை கொச்சி கிளைக்கு மாற்றல் செய்தது. அதனை ஏற்க மறுத்து வேலையிலிருந்து விலகி, "சோவியத் நாடு' இதழில் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். பின்னர் "தாமரை' இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று பல எழுத்தாளர்களை உருவாக்கினார்.

* தமிழ்ப்படங்களில் கதாநாயகனைவிட பல வயது இளையவராக கதாநாயகி இருப்பதுதான் வழக்கம். ஆனால், ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த "கண்ணகி' படத்தில் கோவலனாக நடித்த பி.யூ. சின்னப்பாவுக்கு அப்போது வயது 26. கண்ணகியாக நடித்த கண்ணாம்பாவுக்கு வயது 31. எழுபது வயது கவுந்தியடிகளாக நடித்த யூ. ஆர். ஜீவரத்தினத்திற்கு வயது 16.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com