360 டிகிரி

உதயகாலம்:  பூபாளம், பௌனி,  சோபிகா, வசந்தம்.காலை நேரம்:  பிலஹரி, கேதாரம், ஆரபி, தன்யாசி.நடுப்பகல்: ஸ்ரீராகம், சாவேரி, மத்யமாவதி, மணிரங்கு, மோகனம்.
Updated on
2 min read

ஆலயங்களில் பாடப்படும் இராகங்கள் 

உதயகாலம்:  பூபாளம், பௌனி,  சோபிகா, வசந்தம்.
காலை நேரம்:  பிலஹரி, கேதாரம், ஆரபி, தன்யாசி.
நடுப்பகல்: ஸ்ரீராகம், சாவேரி, மத்யமாவதி, மணிரங்கு, மோகனம்.
சந்தியா காலம்:  சங்கராபரணம், கல்யாணி, நாட்டைக் குறிஞ்சி, பூர்வி கல்யாணி.
இரவு:  காம்போதி, தோடி, பைரவி, நீலாம்பரி.

- ஆறுபாதி புகழேந்தி
ஆதாரம்:  "அருமையான ஆன்மீக விஷயங்கள்'

சிவன் கோயில்களில் வளர்க்கப்படுகிற வில்வ மரத்தின் பழத்தை சிறிதளவு பாலில் கலந்து கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்து இரவில் உணவுக்குப் பிறகு சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.

- கே. பிரபாவதி

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...!

தூக்கம் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை பலர் உணருவதில்லை. நிறைய வேலை இருப்பவர்கள்.. சாதிக்கத் துடிப்பவர்கள்.. ஏன் ஓவராய் தூங்கணும். 6 மணி நேரம் தூங்கினா போதுமே? என நினைக்கிறார்கள். இப்படி இரண்டு வாரம் தினமும் 6 மணி நேரம் தூங்கினால் உடம்பு பாதிக்கப்படுமாம்.
இந்தியர்களில் 83 சதவிகிதம்;  முழு தூக்கம் தூங்குவதில்லை. 11 சதவிகிதம் பேர் வேலை இடத்தில் தூங்கிச் சமாளிக்கிறார்கள்.
சரியாகத் தூங்காதவர்கள், வேலையில் சாதிக்க நினைக்கும்போது அதுவே அவர்களுக்கு இடைஞ்சலாகிவிடும். எப்படி?  கவனம் சிதறுபடும்.. சாதிப்பதில் கோட்டை விடுவோம்.. நன்றாகத் தூங்குங்கள்.. பிறகு சாதிக்கச் செயல்பட்டால்

கூடுதல் வெற்றி பெறுவீர்கள்!

நன்றாகத் தூங்கும்போது, முதலில் அமைதியடையும் மூளை, பிறகு நாம் எண்ணிய திசையில் தானே செயல்பட ஆரம்பித்துவிடும். பலன்... தூக்கத்திலேயே தேடுபவைகளுக்கு விடை தெரிந்துவிடும்...! பிறகு எழுந்து... அதனைச் செயல்படுத்தி வெற்றி காணலாம்...!
நன்றாகத் தூங்குபவர்கள் ஆரோக்கியமாய் இருக்கிறார்கள். சிறு தூக்கம் போட்டுவிட்டு, ஒரு வேலையைச் செய்யுங்கள். நீங்களே அதில் புத்துணர்வை உணருவீர்கள். தூக்கம் ஒரு வகை ஆற்றலே என உணர்ந்து செயல்பட்டு வெற்றியடையுங்கள்.

- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்

சொற்பொழிவாற்றுப் படை

"சொற்பொழிவு' என்னும் அழகான தமிழ்ச் சொல்லை உருவாக்கியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழறிஞர் பால்வண்ண முதலியார். எப்படி மேடையில் பேசுவது என்பது பற்றி  "சொற்பொழிவாற்றுப் படை'  என்னும் சிறந்த நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.

- நெ.இராமன்

தெரிந்து கொள்ளுங்கள்

எழுத்தாளர் ந. சிதம்பர சுப்பிரமணியன் 1912-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ஆம் தேதி காரைக்குடியில் பிறந்தார். 1934-இல் சென்னைக்கு வந்த இவர் புகழ்பெற்ற திரைப்படத்  தயாரிப்பு நிறுவனமான விஜயா வாஹினி ஸ்டூடியோவில் நிர்வாகியாகப் பணியில் சேர்ந்தார். பலமுறை திரைப்படத்திற்குக் கதை எழுத முயன்று தோற்றார். 1967 ஜூலை முதல் தேதி இப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஏறக்குறைய 21 ஆண்டுகள் ந. சிதம்பர சுப்பிரமணியன் இப்பணியில் இருந்தார்.

"வாழ்க்கையின் முடிவு'  என்னும்  ந. சிதம்பர சுப்பிரமணியனின் முதல் கதை  "மணிக்கொடி'  5-ஆவது இதழில் (26.5.1935) வெளியானது. பி.எஸ். ராமையா இவரின் முதல் கதையைப் பிரசுரித்து சிறுகதை உலகிற்கு இவரை அறிமுகம் செய்தார். 60 கதைகள் வரை எழுதியுள்ளார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு  "சக்ரவாகம்'  முதலிய கதைகள்  சென்னை அல்லயன்ஸ் பதிப்பகத்தால் 1939-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இவர் 1978-இல் காலமானார்.

- தங்க.சங்கரபாண்டியன்

அட்சதை

அரிசி தூவி வாழ்த்தும் முறையை (அட்சதை போடுவது)  அறிமுகப்படுத்தியது எகிப்து நாடாகும்.   "உணவுக் கஷ்டம் எதுவுமில்லாமல் மணமக்கள் சுகமாக, நீண்ட நாள் வாழ்க'  என்பதுதான் அரிசியைத் தூவி வாழ்த்துவதற்குப் பொருள்.

செடிகளும் அவற்றின் தாயகமும்

நீரை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தும் செடிகள் எல்லாமே பிற நாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டவைதான்.
சீமைக்கருவேலம் - மத்திய அமெரிக்கா
நெய்வேலி காட்டாமணக்கு - தென் அமெரிக்கா
யூகலிப்டஸ் - ஆஸ்திரேலியா
ஆகாயத் தாமரை - தென் அமெரிக்கா
பார்த்தீனியம் - வட அமெரிக்கா
லாண்டானா கேமரா (உணாப்பூ) - தென் அமெரிக்கா!

- எம்.ஏ.நிவேதா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com